Seyalmantram

Seyalmantram

By Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with AcademyEducationLanguage Learning
Download on the App Store

Seyalmantram episodes

  • அசை விதி நேரசை விதி - வாயசை இலக்கு
    அசை விதி:
    நேரசை விதி
    வாயசை இலக்கு:
    உயரெழும் வாயசை ஒரு குறிலசை (ப)
    இயலசை மெய் உடன் ஒற்றும் (பல்)
    வாயதனில் ஒலிக்கும் நெடில் ஓசை(பா)
    தாயனையில் ஒற்றும் நெடிலோசை நேரசையே.(பால்+இனம்)
    நேரசை நேரிசை யாவும் நேரலை
    பாரசை தமிழ் மொழி வழிமுறை
    இரையசை அசைவு அசைத்து உண்ணும்.
    ஊரசைவில் உணர்ந்து உரைகளில் உண்டு.
    உண்டு உயிர்த்த மெய் ஞானம்
    கண்டு பிடித்து கொள்ளும் பாலினம்
    தண்டு வடம் நிமிர்ந்த நடை
    ஆண்டு பலவாயினும் நேரசையோர் வாயசைப்பர்.
    வாயசை பாவின வகை படுத்தும்
    தாயனை ஆறனை நீர்ப்பசை உயிரியல்
    போயணைந்து ஒற்றும் ஒற்றுமை சொல்
    நயந்தசை தரச் சைகை விசையொலி.
    4 min
  • சுழளாதாரம் - துளிநேர அமர்வு 1
    அனைவருக்கும் வணக்கம்,
    கீழ்க்கூறும் குறு காணொளி / காதொலி பகிர்வில்,
    "செயல் மன்றம்"
    இணையதளத்தினை
    ' மில்டன் கீன்சு டௌநட் '
    பொருளாதார
    "துளி நேர அமர்வு" கூட்டத்தில்
    15 Mar 2023 அன்று பகிர்ந்து கொண்டோம்.
    Sharing at Milton Keynes Doughnut Economics on 15th March 2023 -
    In the Drop-In Sessions at the Leeds University United Kingdom
    Through this Meeting.
    செயல் மன்றம் இணையதளப் பகிர்வு
    நயம்படும் ஆய்வுரை தொநட் சுழளாதாரம்
    ஆயகலை கற்பிக்கும் அயலக முகாம்
    உய்ய பரிந்துரைக்கும் சுற்றுச்சூழல் ஆதாரம்.
    ஆதாரப் பொருளே உற்பத்திச் சுற்று
    சாதாரண உயிரக தன்மை கொண்டதே
    பாதகமிலா பாதகவீதியில் வீற்றிருக்கும் திறன்
    மாதவம் புரிந்திடும் மனித உளம்.
    உளம் கனிந்த இனிய பகிர்வு
    வளம் தரும் படம் மூலமே
    தளம் பாதுகாப்பு சமூக சேவை
    களம் காணும் உயிரியத் தேவை.
    தேவை நிலையில் நிலச் சீர்திருத்தம்
    அவை யாவுமே முறை படுத்த
    அவை யவை கொண்ட சட்ட மாறுதல்
    நாவைசைத்து இயங்க நாடாள மன்றம்.
    3 min
  • சுழளாதாரம் - நரம்பிழை பயணம்
    நரம்பிழை பயணம்
    நுண் உயிரிகள் நீர் பசை
    கண் உள்ள ஆக்க நிலை
    உண்டு உயிர்த்த உயிரகத் தன்மை
    கண்டு பிடித்து கொள்ளும் கலம்.
    கலம் நகரும் தர உறுப்பு
    தலம் இனிதே நிறைவு செய்யும்
    பலம் பெறும் ஆற்றல் மிகும்
    நலம் தரும் பண்பாட்டு பாலினம்.
    விழிவழி தொடரும் நரம்பிழை பயணம்
    அழிவது உறுதி அடுத்த அடுக்கில்
    நாழி ஆகி முன் மறுசுழற்சி
    அழிவில் உதித்த
    உயிர்ப்பில் நுண்ணுயிர்.
    பால் ஊட்டும் உயிரினக் கூறுகள்
    ஆல் இழை இணைப்புத் தளம்
    நல் வாழ்வு முறை பழக்கம்
    வல்லமை உந்தவோர் விருப்பம் கொள்வீர்.
    2 min
  • சுழளாதாரம் மொழி சுற்று
    மொழி சுற்று
    பலர் குறிதனை புரிதலே அறிவது
    சிலர் அறிந்ததை மனம் மொழிந்திட
    ஆலம் விழுதென அணி வகுத்து
    தலம் பற்றி மொழி வளரும்.
    வளம் தரும் சொல் முறைமை
    களம் காணும் நிலமே அழகு
    தளம் ஓடும் அடித்தள நீர்
    உளம் நிறைய ஆற்றிடும் ஆறு.
    ஆறுதல் பெருகும் வண்ணம் குடிமை
    பெறும் பேறுகள் யாவும் நிலைக்கும்
    ஏறும் பொருள் ஆதாரச் சுழல்
    மறுசுழற்சி சேமிப்பு சூழல்.
    சூழல் படிநிலை சரிபார்த்த உரை
    உழன்று சுழலும் காற்றின் அழுத்தம்
    ஆழ ஊடுருவி நிலைத்து நிற்கும்
    வாழ வழி வகுப்பது பதிவு.
    2 min
  • சுழளாதாரம் அருகலை தொடரலை
    அருகலை தொடரலை
    தக்கார் தகவலறியும் நுட்பம் பெற்றார்
    மிக்கார் மிகைகொளல் எண்ணும் அலை
    அக்கம் பக்கம் போகாது அறிந்தார்
    எக்கணமும் எங்ஙனமும் அருகலை ஆக்கத்தொடரலை.
    ஆக்கம் தரும் வகையறியும் தமிழ் வளர்ச்சி
    நோக்கம் அறிந்து செயல்பட முடியுமெங்கும்
    ஊக்கம் உடைமை உள்ளாற்றல் பெருகுமங்கே
    ஐக்கிய ஐம்பொறிகள்
    இயங்கும் இயக்கம்.
    இயக்குநர் ஆவர் மொழி முறைமை
    தயக்கமின்றி செயலாற்றும் வரம்பு நிலை கருத்து
    ஆயகலைகள் யாவும் வசப்படும் பற்றும்
    அயர்ந்து தூங்கி அருளும் பெறும்.
    பெற்றதனால் பேரும் புகழும் சேரும்
    வற்றாத மலர்கள் பூக்கும் வண்ணம்
    நிற்கும் நிலைத்த உள்ள ஒளியங்கே
    கற்கும் பேறுகளில் ஊரகமே வாழ்வுறும்.
    2 min
  • சுழளாதாரம் கடிதம் கடக்கிறது
    கடிதம் கடக்கிறது
    கடிந்து சொல்லும் அளவும் அதிகம்
    துடித்து பேசும் மக்கள் பதிவு
    இடித்து காட்டும் பண்பின் படை
    தடித்த எழுத்து தொடங்கி மறைகிறது.
    மறைவில் இருந்து பழகிய பழக்கம்
    உறையில் இருந்து உருப்பெற்ற மலர்ச்சி
    கறைபட்டு எழுதும் கோல் தாள்
    குறைபாட்டை நீக்க வேண்டிய கருத்து.
    கருத்து கணிப்பு நேரே பிடிப்பு
    இருப்பு நிலை ஆக்க பதிவும்
    துரும்பும் துருப்பும் திரும்பும் பக்கம்
    கரும்பும் நெல்லும் பொங்கும் பொங்கல்.
    பொங்கல் வாழ்த்து அட்டை படம்
    தங்கள் புரிதலும் நேரடிப் பேச்சு
    அங்கும் தளத்தில் சேர்க்கும் திறன்
    இங்கும் பயனர் யாவும் நேரலை.
    2 min
  • சுழளாதாரம் மெய் முறைமை
    மெய் முறைமை
    பருப்பொரு ளாற்றல்.
    மெய் இயல்பு இயற்கை இறைமை
    தாய் அளிக்கும் அன்புப் பால்
    வாய் மொழி சைகை குறி
    தாயனை ஆறனை நீர்ப்பசை உயிரியல்.
    உயிரியல் இயற்பியல் வேதியியல் ஆற்றல்
    வயிறு இரைப்பை குடல் குருதி
    மயிரிழை நரம்புத் தொடரில் தவழும்
    பயிற்சி பழக்கம் பருப்பொரு ளாற்றல்.
    இயக்கம் இயங்கும் முறை தாங்கும்
    தயக்க மின்றிய தரத்தில் மாற்றம்
    மயங்கிய மதிப்பும் மதி கொள்ளும்
    உயரிய குடிமை எத்தருணமும் விருப்பம்.
    அறிதல் புரிதலில் நிலைக்கும்
    மூளைத்திறன்
    பொறி இயல் ஐவகை நிலையம்
    கறிகாய் கனிகள் உணவு உண்டு
    உறிஞ்சும் தன்மை இடமே மெய்.
    2 min
  • சுழளாதாரம் வெண் தொண்டை மீன் கொத்தி
    வெண் தொண்டை மீன் கொத்தி
    விண்வெளிப் பறவை விலங்கின் வகையுண்டு
    கண் அயர்ந்து சுவர் அருகே
    ஊண் தேடித் தன் பொறியாலே.
    பொறியியல் புலனறிவில் வானில் பறக்கும்
    ஏறி இறங்கும் விரைவு விமானம்
    பறித்து கொத்திக் கொண்டு செல்ல
    கறித் துண்டு மீன் புழுத் தேடும்.
    தேடித் தன் குஞ்சிற்கும் உணவளிக்கும்
    பாடிப் பறந்த ஒலி பெருக்கி
    வாடி நிற்கும் கொக்கு போன்றும்
    தாடி வெண்மை நிறம் அழகு.
    வழ வழப்பு மார்பக வெள்ளை
    சுழண்டு விழ ஆணின காதல்
    தொழ வேண்டிய நீள வாய்
    அழகு கொண்டே இனம் பெருக்கும்.
    திறன் பேசியில் மூலம் பலகணி வழியாக எடுத்த படமி ஆகும்.
    "வெண் தொண்டை மீன் கொத்தி"
    3 min

About Seyalmantram

From the publisher's feed

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.