* ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குக் கமல் ஆதரவு
* இடைத்தேர்தல்: ``திமுக-வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” - நெல்லையில் அண்ணாமலை பேச்சு.தி.மு.க கூட்டணிக்கு இடைத்தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அக்கட்சியின் மூத்த அமைச்சர் தலைமையில் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் முதலில் தேர்தல் களத்தில் இருப்பவர் தான் வெற்றி பெறுவார் என்பதில்லை. அவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாலேயே மூத்த அமைச்சர்களைக் களத்துக்கு அனுப்பி நல்லநாள் பார்த்து வேலைகளைத் தொடங்கி விட்டார்கள்.இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் 80 சதவிகிதம் ஆளுங்கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. பண பலம், அதிகார துஷ்பிரயோகம் காரணமாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றாலும் கூட அதன் பின்னர் வரக்கூடிய பொதுத் தேர்தல்களில் மக்களின் செல்வாக்கு இல்லாததால் தோல்வியடைகிறார்கள். எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை,மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான வேட்பாளரை நிறுத்துவோம்.இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பலத்தை நிரூபித்துக் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் தான் பிரதமர் மோடியின் ஆட்சி தொடர்வதற்கான தேர்தல் அந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியமானது. அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த இடைத்தேர்தல் வெற்றி, தோல்வி என்பது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.
* ஜம்மு காஷ்மீரில் கொட்டும் மழையில் இடையே ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கியது பனிஹால் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கனமழை காரணமாக இந்தச்சாலைகளில் கற்கல் விழும் என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் கொட்டும் மழையில் ராம்பன் பகுதியில் இருந்து பனிஹால் நகரம் நோக்கி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்தை சென்று கொண்டிருந்தது.' இந்தநிலையில் மோசமான வானிலை மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெற இருந்த ராகுல்காந்தியின் நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், நாளை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* *குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம், `India: The Modi Question’ என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.JNU: பிபிசி ஆவணப்படம் திரையிடல்; மின்சாரம் துண்டிப்பு - கல்வீசி தாக்குதல் என மாணவர்கள் புகார்
* புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஈரோடு கிழக்கு தொகுதியில் 30% ஆதிகுடி மக்கள் சிறுபான்மையினர் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். அரவிந்த் கெஜ்ரிவாலால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா? 2024 மக்களவைத் தேர்தல்ல என்னோட ஆட்டத்தை பாருங்க என்றார்.
* குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்று தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து முழுமையாக ஆய்வு செய்தபின் எடுத்த முடிவு என சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும், யாருக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Sai M| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed