கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடலின் பதிவு இது. இதில் நமது தமிழக மருத்துவர்கள் கலந்துகொண்டு மக்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நடந்துமுடிந்த இந்த கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு இது, பதில் அறிவதற்கு இந்த கலந்துரையடலின் வலையொலியை கேட்டு பயண்பெறுங்கள்.
1. கொரானா இரண்டாம் அலையின் நிலவரம் தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது?
2. வாட்ஸ்ப் போன்ற சோசியல் மீடியாக்களில் வலம்வரும் மருத்துவமுறைகள் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை என்ன?
3. தடுப்பூசி அளிக்கப்பட்டவர்களுக்கும் கொரானா தொற்று ஏற்ப்படுவது ஏன்?
4. கைவைத்தியம் முறைகள் பயணளிக்குமா?
5. Remdisiver மருந்து பயணளிக்கின்றதா? இந்த மருந்து கொரானாவிற்க்கு எதிராக முழுமையாக செயல்பட்வில்லை என்ற கருத்து எந்த அளவுக்கு உன்மை?
6. சர்க்கரை, இதய நோயாளிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? அவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?
7. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் இரத்தக்கட்டு, மற்றும் அடைப்புகள் ஏற்படுமா?
8. குடும்ப உறுப்பினர்களுக்கு கொரானா தொற்றியிருந்தாலும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்க்கு காரணம் என்ன? அவர்களுக்கு கொரானா தொற்றாமலே இருக்கும் அளவுக்கு அவர்களின் நோய் எதிர்ப்புசக்தி வேலை செய்வதாக எடுத்துக்கொள்ளலாமா?
9. உணவில் அலர்ஜி மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
10. கோவிட் தொற்று ஏற்பட்டால் மருத்துர்களின் ஆலோசனையின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வழிமுறைகள் என்னென்ன?
11. முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ள குறிப்பிட்ட கால இடைவெளியை விட அதிகமாக எடுத்துக்கொள்ளலாமா?
12. வெளிநாட்டில் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பியதும் அங்கே கிடைக்கும் வேறு ஒரு தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? அல்லது அதே தடுப்பூசிதான் இரண்டாம்முறையும் போடவேண்டுமா?
13. வெளிநாட்டில் இருப்பவர்கள் அஸ்ட்ராஜெனீக்காவீன் தடுப்பூசியை முதலாம் தடுப்பூசியாக எடுத்துக்கொண்டு இந்தியாவிற்க்கோ இலங்கைக்கோ திரும்பியபிண் கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை இரண்டாவதாக எடுத்துக்கொள்ளலாமா?
14. சர்ஜிக்கல் மாஸ்க் போதுமானதா அல்லது N95 மாஸ்க அனைவருக்கும் கட்டாயமா?
15. 3 Ply (சர்ஜிகல்) மாஸ்க்கை எத்தனை முறை அல்லது எத்தனை மணிநேரம் பயண்படுத்தலாம்?
16. N95 மாஸ்க்கை நீராவியில் காட்டி மறுமுறை பயண்படுத்தலாமா?
17. பொதுவெளியில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசம் அணியலாமா?
18. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன?
19. தடுப்பூசி போட்டுக்கொள்வது மகப்பேறை எவ்வாறு பாதிக்கும்?
20. கொரோனா காற்றில் பரவுகிறது என்பது உன்மையா?
21. கோவிட் தொற்று ஏற்ப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்க்கு வந்த பிண்பு வீட்டில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?
22. எந்தெந்த நோய் இருப்பவர்கள் CRP Test எடுத்து மருத்துவரின் ஆலோசனை பெற்று மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்?
23. காய்கறிகள் பழங்களை கழுவுவதற்ககு எதுவும் வழிமுறைகள் இருக்கின்றனவா?
24. ஆக்சிசன் மானிட்டர் சாதனம் பயண்படுத்தும் முறைகள் என்னென்ன?
25. இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்காண காரணம் என்ன?
26. முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிக்கு உண்டான இடைவெளியில் தொற்று ஏற்பட்டால் அதன் அறிகுறிகளில் வித்தியாசம் இருக்குமா?
27. தினமும் அலுவலகத்துக்கு சென்று வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எனெனென்ன?
28. பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
29. ஹோமியோபதி மருத்துவம் கோவிட் தொற்றை குணப்படுத்துமா?
30. இதயத்தில் பேஸ் மேக்கர்ஸ் வைத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்க்கு எதுவும் வழிமுறைகள் உள்ளனவா?
31. மதுபானம் அருந்துவது கோவிட் தொற்றின் அறிகுறிகளை கண்டறிய தடையாக இருக்குமா?
32. Anti-anxiety மாத்திரை Nexito எடுத்துக்கொள்வார்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமலேயே தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
This is an offline version of Twitter Space discussion with TN Doctos
Host - "@v6rajgr" && "@dark98rises"
Doctors - "@drcnpkaran" "@manikandanraj92" "@ramalingamdr"
Thanks to "@nellaiseemai", "@ShaliniJKA"