சொந்தங்களை குறை கூறி சுப நிகழ்ச்சிகளில் மட்டுமே சந்தித்து வாழும் சமூகத்தில், நா. முத்துக்குமாரின் படைப்பான "அணிலாடும் மூன்றில்", சொந்தங்களை கொண்டாடி மகிழ்விக்கும் புத்தகமாக இருக்கிறது. அம்மா, அப்பாவில் துவங்கி, சித்தப்பா, சித்தி, அத்தை பொண்ணு, பங்காளி, அக்கா, தம்பி, மகன், மனைவி என்று அணைத்து உறவுகளை பற்றியும் அவர் எழுதி இருப்பதை படிக்கும்போது சொந்தங்களை காண வேண்டும் என்ற ஏக்கத்தை அதிகரிக்கிறது. இறந்த போன நம் தாத்தா பாட்டியிடம் நம் சொந்தங்களை பற்றி கேட்டு அறிந்திருக்கலாமோ என்றும் யோசிக்க வைக்கிறது.