Varalaaru Valartha Vaaigal

The death of God | Singaravelar


Listen Later

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அறியப்படும் தோழர். ம. சிங்காரவேலர், ஏழ்மையான மீனவக் குடும்பத்தில் பிறந்தவர். கான்பூரில் 1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கவிழா மாநாட்டில் தலைமை தாங்கிய இவர், மிகத் தீவிரமான நாத்திகவாதியும் கூட.
நாத்திகக் கொள்கையில் ஈடுபாடு கொண்டதால், 1920-களில் தமிழகத்தைப் புரட்டிய பிராமணர் எதிர்ப்பு இயக்கங்களில் அதிகமாக அறியப்பட்டார். தந்தைப் பெரியாருடன் ஒன்றிணைந்து வேலைசெய்தார்.
காந்தியின் ஆத்திகக் கொள்கை காங்கிரஸில் செல்வாக்குப் பெறத் தொடங்கியபோது, காந்தியின் மனநிலையே இந்தியாவின் மனநிலை என மேற்கத்திய உலகம் பேசத்தொடங்கியது.
பகுத்தறிவிலும் - அறிவியல் ஆராய்ச்சியிலும் விருப்பம் கொண்ட இந்தியர்கள், நாத்திகத்தின்பால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே சிங்காரவேலரின் வாழ்வு பறைசாற்றியது.
மதறாஸ் மாகாணத்தில் கூடிய முதல் நாத்திகர் மாநாட்டில், தோழர் சிங்காரவேலர் வழங்கிய உரை இந்தியாவின் மனசாட்சி - வெறும் காந்தியின் மனசாட்சி அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. கடவுளின் அஸ்திவாரத்தை தோண்டித் துலக்கிய சிங்காரவேலரின் பேச்சு இதோ..
...more
View all episodesView all episodes
Download on the App Store

Varalaaru Valartha VaaigalBy Satheesh Kumar