வாசகர் வட்டம் : Vaasagar Vattam

தனுமை - வண்ணதாசன் : கூட்டம் - 205 : சிறுகதை வாசிப்பு


Listen Later

வாசிப்பவர் : ராஜா செல்வம் | வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.
கூட்டத்தில் வண்ணதாசன் அவர்களின் (தமிழில் வெளியான 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக பலராலும் கருதப்படும்) தனுமை சிறுகதை வாசிக்கப்படும்.
...more
View all episodesView all episodes
Download on the App Store

வாசகர் வட்டம் : Vaasagar VattamBy IISc Thamizh Peravai