வாசிப்பவர் : சரவணக்குமார்
இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆஸ்டின் க்ளென் ஒரு சித்திர படைப்பாளி , பிளாக்கர் (austinkelon.com). இணையத்தால் பல செயலிகளில் அடிமையாகி கொண்டிருக்கும்
நாம் எப்படி அதே இணையத்தை பயன்படுத்தி எப்படி நம்மை மேம்படுத்தி கொள்வது?
இணையத்தில் நமக்கென தனி அடையாளம் பதிப்பது எவ்வாறு ?
அதில் இருந்து எவ்வாறு பணம் பண்ணுவது?
எதிர் கருத்துக்களை கையாள்வது எப்படி ?
மற்றவர் படைப்புக்களை நேர்மையாக திருடுவது எப்படி?
சொந்த படைப்புகள் இல்லாமல், திருட்டு படைப்புக்களை வைத்தே இணையத்தில் வளருவது எப்படி? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த இக்காலத்து புத்தகம். சுய கண்டுபிடிப்பிக்கான எளிதான வழி இந்த இணையம், அதற்கு நாம் தினமும் சிறு படைப்புகள் , கருத்துக்கள் அல்லது தரவுகளை இணைய வெளியில் பகிர வேண்டும் என்கிறார் ஆசிரியர்.