Chittukuruvi Tamil Podcast for Children

Valmiki Ramayanam For Kids - Uttara Kandam | Tamil Audiobooks | Deepika Arun


Listen Later

ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன.

தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன.#tamilaudiobooks #valmikiramayanamaudiobook #ramayanamforkids #deepikaarun #sandeepika #ramaynamstories #ramayanam #spiritual #ramayana #kadhaiosai #chittukuruvi #chittukuruvipodcast

...more
View all episodesView all episodes
Download on the App Store

Chittukuruvi Tamil Podcast for ChildrenBy Deepika Arun

  • 5
  • 5
  • 5
  • 5
  • 5

5

6 ratings


More shows like Chittukuruvi Tamil Podcast for Children

View all
கதை நேரம் | Tamil Kids Podcast (Bedtime Stories) by Bhargav Kesavan

கதை நேரம் | Tamil Kids Podcast (Bedtime Stories)

1 Listeners