காந்தி. விமர்சனங்களால் கட்டியெழுந்த வரலாற்றுப் பெயர். தன் ஒடிந்துபோன தேகத்தை தூக்கிக் கொண்டு கிழக்கு மேற்காக அலைந்த அஹிம்சைப் பறவை. வன்முறை வேண்டாமென்று வறட்டுக் கவுரவத்தால் வாய்க் கிழிய பேசிய ஆன்மா, வன்முறையாலே விண்ணுலகம் சென்ற முரண்பட்ட வரலாறு இது.
காந்தி கொலைக்களப்பட்ட மறுகணமே கோட்சே கைது செய்யப் பட்டார். கொலையை நேரில் பார்த்த நந்தலால் மேத்தா, துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை உருது மொழியில் தாக்கல் செய்தார். 1948-ம் ஆண்டின் மே மாதம் தொடங்கிய விசாரணை 1949-ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வரை நீடித்தது. இறுதியாக கோட்சேவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேல்முறையீடு செய்த கோட்சேவின் வழக்கு விசாரணை, மே மாதம் 5-ம் தேதி சிம்லாவில் நடைபெற்றது. அங்கு அதன் கொலைப் பின்னணிகளை வாக்குமூலமாக வெளிக்கொணர்ந்தது வரலாற்று பிரசித்தி பெற்ற ஆவணம் ஆனது.
நீதிபதி ஜி.டி.கோஸ்லா பின்னாட்களில் இதை இப்படி பதிவு செய்கிறார், " பார்வையாளர்கள் உறைந்து போனார்கள். கோட்சே தன் பேச்சை நிறுத்தியதும் நீதிமன்ற வளாகத்தில் பெருத்த மவுனம் சூழ்ந்தது. பெண்கள் கண்ணீர் விட்டிருந்தனர். ஆண்கள் இருமிக் கொண்டிருந்தனர். பலர் தன் கைக் குட்டையால் முகத்தை மறைத்து அழுது வடித்திருந்தனர். நான் ஏதோ மெலோடிராமா படத்தில் நடிப்பது போன்றும் ஹாலிவுட் படத்தின் அரங்கேற்ற காட்சி போன்றும் அது தோற்றமளித்தது. எனது அதிகாரம் பறிக்கப்பட்டு, பார்வையாளர்களாலேயே இத்தண்டனைக்கு தீர்ப்பு எழுதப்பட்டதாக உணர்ந்தேன். கோட்சே ஒரு நிரபராதி என்பதை கண்கொட்டாமல் பார்த்து, என் கை பார்வையாளர்களால் தீர்ப்பெழுதச் சொல்லி வற்புறுத்தப்பட்டதை உணர்ந்தேன்." அத்தகு நயமிக்க வாக்குமூலத்தை கோட்சே உதிர்த்திருந்தார்.
காந்தியின் மிக நெருங்கிய நண்பரான வெரியர் எல்வின், இதை சற்றே மிகைப்படுத்தி, "சாக்ரடீஸின் நீதிமன்ற பேச்சிற்கு பிற்பாடு இத்தகைய வாக்குமூலத்தை நான் எங்கும் பார்த்ததில்லை" என்று பதிவுசெய்தார்.
மதிமயக்கும் அந்த வாக்குமூலத்தில், கோட்சே என்னதான் சொன்னார்? இதோ அந்தப் பேச்சு..