Dr.Thillli | Dr.House | DR Radha
சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தும் வழிமுறைகள் :-
குடிநீரில் சரியான அளவில் ப்ளீச்சிங் பவுடர் கலக்கும் முறை—
குளோரின் அளவு ( Overhead tank) மேல்நிலை நீர்த்தோக்க தொட்டியில் 2 PPM இருக்க வேண்டும்..
வீட்டு குழாய்களில் 0.5 PPM இருக்க வேண்டும்..
வீடுகளில் உள்ள மேல்நீர் தேக்கத்தொட்டியில் 1000லி தண்ணீருக்கு 33% குளோரின் உள்ள தரமான பிளிச்சிங் பவுடர் 4 கிராம் வீதம் ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு பசை போல ஆக்கவேண்டும்.
வாளியில் முக்கால் பகுதி அளவு வரும்வரை தண்ணீர் வரும்வரை நன்கு கலக்க வேண்டும்..
சுண்ணாம்பு & பிற வண்டல் முதலானவை வாளியின் அடியில் தங்கும்வரை 10-15 நிமிடம் காத்திருக்க வேண்டும்..
பின்னர் தெளிந்த குளோரின் நீரை மற்றொரு வாளியில் ஊத்தி வீட்டு வீட்டு மேல்தொட்டியில் நன்கு கலக்க வேண்டும்..
குளோரின் நன்கு கலந்த பின்னர் ஒருமணி நேரம் கழித்து தண்ணீரை பயன்படுத்தலாம்.
பேரிடர் காலத்தில் நாம் செய்ய வேண்டியது #thilli_info:
கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
மருத்துவர்களின் அறிவுரைபடியே மருந்து எடுத்து கொள்ள வேண்டும். Self-medication தவிர்க்கவும்.
Electrical appliances மிக கவனமாக கையாள வேண்டும். Gas leak check செய்யவும்.
போதுமான அளவுக்கு, நாள்பட உபயோகம் படுத்தும் பொருட்கள் குறிப்பாக, மாத்திரைகள் வாங்கி கொள்ளுங்கள்
வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானால், அதற்கேற்ப துணி,உணவு மற்றும் அன்றாட பயன்படுத்தும் பொருட்களை pack பண்ணி,தாயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்
Social Mediaவில் உதவி கேட்க தயாங்காதீர். உதவி
வந்த பிறகு, அந்த உதவி பதிவை delete செய்யுவும்
நம்பகத்தன்மை கொண்ட செய்தி ஊடங்கங்களில் வரும் செய்தி மட்டும் நம்ப வேண்டும். வீன் வதந்திகளை நம்பாதீர்/WhatsApp பரப்பாதீர்