எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் - பகுதி 1 | சி. பத்மநாதன்

    மோரியரின் தலைநகரான பாடலிபுரத்திலே மொக்கலிபுத்த தீஸரின் தலைமையிற் கூடிய மூன்றாம் பௌத்த மாநாட்டிலே பௌத்த  சமயத்தைப் பரதகண்டத்திலும் அதற்கப்பாலுள்ள தேசங்களிலும் பரப்புவதற்கெனக் குழுக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்கள்.
    அதன்படி மகிந்த தேரரின் தலைமையிலான குழு இலங்கைக்குச் சென்றது. அங்குள்ள அரசனாகிய தேவநம்பிய திஸனின் ஆதரவோடு அரண்மனையின் அருகிலுள்ள வனத்தில் மகாவிகாரை அமைக்கப்பட்டது.
    காவல் தெய்வங்கள் நால்வரை வழிபடும் மரபு இலங்கையில் 14 ஆம் நூற்றாண்டு முதல் வழமையாகிவிட்டது. உபுல்வன், சமன், விபீஷணன் கந்தகுமாரன் ஆகிய நால்வரையும் அவ்வாறான தேவர்களாகக் கொண்டனர் என்பதை லங்காதிலகத்து கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது.
    அங்குள்ள கட்டுமானத்தில், மூலவராகப் புத்தர் பெருமானையும் அதன் வெளிப்புறச் சுவர்களை முன்றில்களான கோட்டங்களாக அமைத்து அவற்றிலே காவல் புரியும் தேவர்களில் மூவரின் பிரதிமைகளைத் தாபனம் பண்ணியுள்ளனர்.
    இலங்கையில் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மஹிந்த தேரர் உருவாக்கிய மகாவிரை தேரவாதத்தின் நிலைக்களனாக நிலைபெற்றது. ஆதியான பௌத்த பாரம்பரியங்களும் இலக்கிய மரபுகளும் மகாவிகாரையினாற் பேணப்பட்டன.
    வட்டகாமனி அபையன் (கிமு.89-77) அபையகிரி விகாரத்தை அமைத்து, வழமைக்கு மாறாக அதனை திஸ்ஸதேரருக்கு வழங்கினான். அரசன் படையெடுப்பொன்றின் காரணமாகப் பதவியிழந்திருந்த காலத்திலே திஸ்ஸதேரர் ஆதரவு புரிந்தமையால் அதற்கான நன்றிக்கடனாக அவரிடம் விகாரையினை வழங்கினான்.

    26 min
  • ஓயாத வன்முறை அலைகள் | கண்டிசீமை | இரா. சடகோபன்

    இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    8 min
  • 18 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய பகுதிகளும் | யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள் | இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

    இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

    15 min
  • காடும் காடுசார் பல்வகைமையும் - பகுதி 2 | வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் | கலாநிதி. சி. ஜேம்சன் அரசகேசரி

    எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

    14 min
  • இலங்கை தமிழ் பௌத்தர்கள் - பகுதி 1 | ஆங்கில மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன | தமிழில் : இரா. சடகோபன்

    எங்களது பௌத்தநூல் ‘தமிழ் பௌத்த’ நூலேயாகும். அதன்படி தென்னிந்தியாவில் வசித்த, வசிக்கிற தமிழ் பௌத்தர்களை நாம் இதுவரை சந்தித்துள்ளோம். மேலே குறிப்பிட்டுள்ளபடி தென்னிந்தியா அல்லது தமிழ்நாடு மாநிலம் தவிர இலங்கையிலேயே தமிழ் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அவர்கள் மத்தியில் தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றனரா? இதற்கு பதில் சொல்வது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஸ்ரீ லங்காவில் தமிழ் பௌத்தம் பற்றிய பரிசோதனைகளும், ஆய்வுகளும், மிக அரிதானதாகவே காணப்படுகின்றன.

    21 min
  • சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி -பகுதி 2 | வி. நவரத்தினம் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

    1947 இல் சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்புடன் தமிழர்களின் துயர நாடகம் ஆரம்பித்தது. சோல்பரி அரசியல் யாப்பின் தோற்றம், அதன் வீழ்ச்சி, இறுதியில் அது ஒழிக்கப்பட்டமை ஆகிய வரலாறு தமிழர்களின் இத்துன்பியல் நாடகத்தில் உள்ளடங்குவதாகும். தமிழ் - சிங்கள உறவுகளில் இவ்வரசியல் யாப்பு கறுப்புப் பக்கங்களாக உள்ளது.

    14 min
  • தேசியமயமாக்கமும் அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளும் | கண்டி சீமை | இரா. சடகோபன்

    இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    7 min
  • காடும் காடுசார் பல்வகைமையும் – பகுதி 1 | வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் | கலாநிதி. சி. ஜேம்சன் அரசகேசரி

    எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

    17 min
  • அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் - பகுதி 01 / டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு / தமிழில் : ஜிஃப்ரி ஹாசன்

    இலங்கை முஸ்லிம்கள் குறித்து பண்பாட்டு மானிடவியல் ரீதியான ஆய்வுகளை மானிடவியல் ஆய்வு மரபுகளைப் பின்பற்றி முறையான பரந்துபட்ட வகையில் மேற்கொண்டவர் பேராசிரியர் டெனிஸ் மெக்கில்ரே. அமெரிக்கரான டெனிஸ் மெக்கில்ரே கொலராடோ பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைப் பேராசிரியர். இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த பரந்துபட்ட மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்ட மேற்கத்தேயப் பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர் மெக்கில்ரே. குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பண்பாட்டு மானிடவியல் மரபுகள், தொன்மங்கள், பண்பாட்டுக் கூறுகள் குறித்த விரிந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனை உலகப் பரப்புக்குக் கொண்டு சென்றவர் என்ற வகையில் இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, மானிடவியல் மரபுகள், தொன்மங்கள் பற்றிய அவரது சமூகவியல் நோக்கிலான ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இந்தத் தலைப்பில் வெவ்வேறு உப தலைப்புகளுடன் வெளிவரும்.


    13 min
  • பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும் | பதார்த்த சூடாமணி | முனைவர் பால.சிவகடாட்சம்

    நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற இந் நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவு வகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இத் தொடர் ஆராய்கின்றது.

    15 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.