எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 5 | யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் | நடராஜா செல்வராஜா

    “யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

    22 min
  • தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் - பகுதி 2 | ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

    1930 களில் முதற்தடவையாக கொழும்பு நகரின் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினரான மலையாளிகளுக்கு எதிரான இனவாத கூக்குரலை தொடக்கினர். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் எழுந்த இந்த இனவாத எதிர்ப்பை இடதுசாரி இயக்கம் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
    அக்காலத்தின் பொருளாதார மந்தம் வேலையின்மையை அதிகரித்ததால் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. அந்நியர்கள் 'மண்ணின் புதல்வர்களான' சிங்களவர்களின் வேலைகள், வர்த்தக முயற்சிகள் என்பனவற்றை தட்டிப் பறிப்பதாகவும் வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
    இந்தியத் தொழிலாளர்கள் தமது கூலி, வேலைத்தள நிலைமைகள் முதலியனவற்றிற்காகவும், வாக்குரிமை போன்ற அரசியல் உரிமைகளுக்காகவும் போராடுவதற்கு இடதுசாரிகள் உதவத் தொடங்கினர். சிங்கள முதலாளி வர்க்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுப்பதில் முனைப்புடன் செயற்பட்டது.
    அதற்கு தமிழ், முஸ்லிம் முதலாளி வர்க்கங்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உள்ளூராட்சி மட்டத்திலும் சட்டசபை தேர்தல்களின் போதும் வாக்குரிமையை வழங்கக் கூடாது என்பதில் சிங்கள முதலாளிவகுப்பு உறுதியாக இருந்தது.
    இடதுசாரிகள் தேசியம் பற்றிய ஏற்றுக்கொள்ளபட்ட வரையறைகளை மீறிச் சென்றதற்கு இன்னொரு உதாரணமாக தேசியக் கொடி என்ற விடயத்தைக் குறிப்பிடலாம். தேசியக் கொடி 'நாட்டுப்பற்று', தேசியவாதம் போன்ற உணர்வுகளை உடையவர்களுக்கு மனஎழுச்சியை தூண்டும் விடயமாகும்.
    இலங்கை சுதந்திரம் அடைந்தபோது ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியக் கொடி ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. அவ்வேளை சிங்களவர் தமது சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கவேண்டும் என்று அழுங்குப்பிடியாக வாதாடினர். சிறுபான்மை இனத்தவர்கள் இதற்கு இணங்கவில்லை.

    26 min
  • மேகம் கவிந்த தாரகை : மருத்துவர் கிறீன் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்

    ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

    9 min
  • போரினால் புலம்பெயர்ந்த சமூகங்களின் தாயகத்துடனான உறவு : சர்வேந்திராவின் முனைவர் பட்ட ஆய்வு ஓர் அறிமுகம் | திக்குகள் எட்டும் | ரூபன் சிவராஜா

    ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

    28 min
  • நெருக்கடிக் காலத்தில் பெருந்தோட்டம் | கண்டிசீமை | இரா. சடகோபன்

    இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    8 min
  • தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் - பகுதி 1 | ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

    முதலாம் உலகயுத்தம் ஆரம்பித்த வேலையில் ஐரோப்பாவில் சோஷலிஸ்டுகள் மத்தியில் தேசியவாத இனவாத உணர்வுகள் கிளப்பப்பட்டன. பெரும்பாலான சோஷலிசக் கட்சிகள் தத்தம் தந்தையர் நாட்டுக்காக (தாய் நாட்டிற்காக) போரில் ஈடுபடும்படி தொழிலாளர்களைக் கேட்டன.
    மார்க்சிய இயக்கம் அதன் தொடக்க காலத்தில் இருந்தே தேசிய உணர்வு என்னும் விடயம் பற்றிக் கருத்துச் செலுத்தி வந்தது. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் (National States) உருவாகிக் கொண்டிருந்த போதும், காலனிகளினால் தேசிய விடுதலை இயக்கங்கள் எழுந்த போதும் தேசிய உணர்வு கிளர்ந்தெழுந்தது.
    றோசா லக்சம்பேர்க் அவர்கள் நோக்கில் முதலாளிகளும், தொழிலாளர்களும் எந்த ஒரு விடயத்திலும் ஓரணியில் ஒன்று சேர முடியாது. போலிஷ் மக்களின் சுதந்திரம், சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் போலிஷ் தொழிலாளி வர்க்கம் போலிஷ் முதலாளிகளுடன் ஒன்றிணைய முடியாது என்பதே றோசா லக்சம்பேர்க் நிலைப்பாடு.
    லெனின் றோசா லக்சம்பேர்க் கருத்துக்கு மாறாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். லக்சம்பேர்க் - லெனின் விவாதம் மார்க்சிய சிந்தனை வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்தது.
    1935 இல் இலங்கைச் சமசமாஜக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை. கட்சியின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய உரையாடல்கள் தெளிவற்றனவாகவும் இருண்மை உடையனவாகவும் இருந்து வருவதையும் காணலாம்.
    தமிழ் பூஷ்வா தலைவர்களும் இக்காலகட்டத்தில் தம் மக்களின் குறைகளை சிறுபான்மையினர் உரிமைகள்' (Minority Rights) என்ற வகையிலேயே முன்வைத்தார்கள் என்பது உண்மையாகும்.  

    27 min
  • கடல் சார் உயிர்ப்பல்வகைமையும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியும் | வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் | கலாநிதி. சி. ஜேம்சன் அரசகேசரி

    எமதுசுற்றாடல் உயிரியல் மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறானஅபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

    32 min
  • கிழக்கிலங்கை முஸ்லிம் மக்கட்பெயராய்வு | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம். ஐ. எம். சாக்கீர்

    கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

    18 min
  • பெரிய புளியங்குளம் தமிழ்க் கல்வெட்டும் முள்ளியான் குடிமனை அழிபாடுகளும் | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

    இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.


    9 min
  • பெருந்தோட்டங்களின் அரசுடமையாக்கம் | கண்டி சீமை | இரா. சடகோபன்

    இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    9 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.