நம் வாழ்வில் மைய கதாப்பாத்திரங்களை நீக்கினால் எஞ்சுவது முக்கால் வாசி மூணாம் மனுஷப் பயல்கள் தான். கடல் போல இவர்கள் நம்மை சுழ்ந்து ஏராள வெரைட்டிகளில் சுற்றி அலைகிறார்கள். நம் வாழ்வை பாதித்தும், பாதிக்காமலும், ஒரு நொடி கடந்தும், அந்நியராய் கூடவே இருந்தும் என பலப்பல ரூபங்களில். அவ்வளவு ஏன்? வருடங்கள் கழிந்த உங்கள் முகநூல் பதிவை காணும் உங்களை நீங்களே மூணாம் மனுஷப் பக்கியாக காணும் சந்தர்ப்பம் ஏராளம் நம் தலைமுறை அனுபவம். திரைப்பட உப கதாப்பாத்திரங்கள் போல நாம் மூணாம் மனுஷர்களை குறைவாக கவனிக்கிறோம். திரையெழுத்தில் ஓர் க்ளீஷே விதி உண்டு; காரணகாரியம் அற்ற மனிதர்களை திரையில் சொருகக் கூடாது. அதாவது அவர்கள் கதையில் பாதிப்பு செலுத்தியாக வேண்டும்; குஷி பட எஸ்.ஜே.சூர்யா cameo மாதிரி. அப்படி நம் வாழ்வில் கடல்மண் அளவு நீக்கமற நிறைந்திருக்கும் மூணாம் மனுஷர்களின் சின்ன நினைவுகூரலே இந்த podcast.