அதிரையில் 73 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (02-08-2019) வெள்ளிக்கிழமை துவங்கியது.
72 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர்.
இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்தஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என முடிவு செய்யப்பட்டது.
நோயால் பீடிக்கப்பட்டு உயிர் பலியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அன்று ஆரம்பித்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் காரணத்தினால் இன்று வரையிலும் அதிரை நகரத்தில் காலரா நோய் எட்டிக்கூட பார்க்கவில்லை எனலாம்.
இவ்வருடத்திற்காக இன்று ஆரம்பித்து நடைபெற்ற புஹாரி ஷரீஃப் மஜ்லிஸில் 2000 க்கும் அதிகமானோர் அதிலும் குறிப்பாக, 600 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்!
#அதிரை_ஜாவியா #புகாரி_மஜ்லிஸ் #AdiraiMuslims #sunnahtruth
2019 Bukhari Mazlis Full Day Bayan link
https://www.pdfsunnathjamath.com/search/label/2019-அதிரை%20புகாரி%20மஜ்லிஸ்