1. முழுதாக கட்டி முடிக்கப் பட்ட ஒரு கோவிலில் இறை விக்ரகத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்து அது முறைப்படி வணங்கத்தக்கதாக ஆவதற்கு உள்ள நடைமுறைகளைப் பற்றி சற்று விளக்க முடியுமா?
2. எல்லாக் கோவில்களும் பிரபலமாவதில்லையே? ஏன் ஒரு சில கோவில்கள் மாத்திரம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன? எத்தனையோ பல கோவில்கள் நலிவுற்று, அன்றாட விளக்கு ஏற்றவோ பூஜை செய்யவோ இயலாத அளவுக்கு ஏன் நலிவுற்றுப் போகின்றன? மிகத் தொன்மையான, பாடல் பெற்ற ஸ்தலங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையே?
3. பரவலாக மக்கள் தொடர்ந்து வந்து பூஜைகளும் திருவிழாக்களும் நடக்கும் கோவில்களில் கூட நீங்கள் குறிப்பிட்ட மந்திர ஹீனம், கிரியா ஹீனம், பக்தி ஹீனம் முதலியவை அர்ச்சகர்களிடம் காணப்படுகிறதே? அதனால் அங்கே தெய்வீக சக்தி குறையாதா?
4. மூல விக்ரகத்துக்குத் தானே அஷ்டபந்தனம், ஆவாகனம், கும்பாபிஷேகம் போன்ற சடங்குகளை செய்து பிராணப் பிரதிஷ்டை செய்தார்கள்? பின்னர் கோவிலுக்கு வெளியே உற்சவங்களில் வீதியுலாவுக்கு எடுத்துச் செல்லும் உற்சவ மூர்த்திக்கு தெய்வீகத் தன்மை எப்படி வரும்?
5. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை ஒரு கோவில் விக்கிரகத்துக்குள் அடைத்துவிட முடியுமா? அதைக் கூட சிலர் திருடிவிடுகிறார்களே? விக்கிரகத்துக்கு விலை உயர்ந்த நகைகளை சிலர் அணிவிக்க, சிலர் அவற்றைத் திருடிக் கொண்டு போய்விடுகிறார்களே? எதுக்கு மதிப்பு? சாமிக்கா? சிலைக்கா, பொன் நகைகளுக்கா?
6. உற்சவம் எதுவும் நடைபெறாத நிலையில், கொள்ளையர்கள் சன்னிதியை உடைத்துத் திறந்து உற்சவ மூர்த்தியின் விக்ரஹத்தைக் கொள்ளையடித்துப் போனால், அது என்ன நிலைமை?
7. ஒரு வேளை கொள்ளையர்கள் மூல விக்ரகத்தை உடைத்து பின்னப் படுத்தினாலோ, இல்லை அதன் பீடத்திலிருந்து அசைத்தெடுத்தாலோ, இல்லை மூல விக்ரகத்தையே திருடிப்போனாலோ நிலைமை என்ன?
8. உற்சவ மூர்த்தி வீதியுலாவில் இருக்கையில் ஒரு வேளை கொள்ளையர்கள் உற்சவ மூர்த்தியைக் கடத்திக் கொண்டு போய்விட்டால் அப்போது நிலைமை என்ன?
9. திருடு போன விக்ரஹம் ஒரு வேளை திரும்பக் கிடைத்தால் அதன் நிலைமை என்ன?
===============
இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.
ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.
'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #workship #aagaman #temples