Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • சினிமா செய்திகள் (12-02-2026)

    வித் லவ் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனஸ்வரா ராஜன், "வித் லவ் திரைப்படத்தை மிகுந்த அன்புடன் பெற்றதற்கு பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி. திரையரங்கிற்கு வந்த போது கிடைத்த வரவேற்பை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பார்வையாளர்கள் படத்தை மிகவும் ரசிக்கிறார்கள். தலைவர் ரஜினி காந்தை நாங்கள் சந்தித்தோம், அவரது கருத்து எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது," என்றார்.

    2 min
  • சினிமா செய்திகள் (11-02-2026)

    புதுச்சேரி அரசு சார்பில் நாளை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தினேஷ் செல்வராஜின் கடல்கன்னி படங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் திரையிடப்பட உள்ளது. 

    2 min
  • சினிமா செய்திகள் (10-02-2026)

    சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், வித் லவ் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.

    2 min
  • சினிமா செய்திகள் (09-02-2026)

    தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில், இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த X தளப்பதிவில் அவர், "நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மையல்ல," என தெரிவித்துள்ளார்.

    2 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners