
Sign up to save your podcasts
Or


மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்துக்கு வந்தார். அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் மீண்டும் எழுச்சி பெற்று தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு உதயநிதிக்காக நடத்தப்பட்டதா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
நடிகர் தனுஷ், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'கர' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
டித்வா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
'ஜன நாயகன்' வெளியாகாத காரணத்தால் அந்த கோபத்தை விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது காட்டுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த சுதா கொங்கரா, "அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, மிக மோசமான வகையிலான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடக்கின்றன. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கே தெரியும். இத்தகைய செயல்கள் "ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரம்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர் போராட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை
From the publisher's feed

56 Listeners