ஒரு விபரீத யோசனை நேருவுக்கு எதனால் வந்தது? யாரால் வந்தது என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ‘இந்தியாவை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப் போகிறேன்’ என்று திடீர் பிரகடனம் செய்தார் அவர்.
கிழக்கு மாகாணம், மேற்கு மாகாணம், வடக்கு மாகாணம், தெற்கு மாகாணம், மத்திய மாகாணம் என்று அதற்குப் பெயர்களும் சூட்டினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாகாணங்கள் சேர்ந்து ஒரே மாகாணமாக, ‘தெற்கு மாகாணமாக ஆக்கப்படும்’ என்றார். அவரது மொழியில் சொல்லப்போனால் அதற்கு, ‘தட்சிணப் பிரதேசம்’ என்று பெயர்.
Podcast channel manager- பிரபு வெங்கட்