PUMS-KONDAMPATTY KALVI RADIO
(PRESENTS FREE ONLINE PODCAST)

PUMS-KONDAMPATTY KALVI RADIO (PRESENTS FREE ONLINE PODCAST)

By ARUN KUMAREducation
Download on the App Store

PUMS-KONDAMPATTY KALVI RADIO (PRESENTS FREE ONLINE PODCAST) episodes

  • திருக்குறள்-23

    குறள் 23:

    இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்

    பெருமை பிறங்கிற் றுலகு.

    விளக்கம்:

    நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

    1 min
  • திருக்குறள்-22

    குறள் 22:

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


    விளக்கம்:

    ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த  உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

    1 min
  • திருக்குறள்-21

    குறள் 21:

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

    வேண்டும் பனுவல் துணிவு.


    விளக்கம்:

    தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின்  பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

    1 min
  • திருக்குறள்:20

    குறள் 20:

    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

    வானின் றமையா தொழுக்கு.

    விளக்கம்:

    எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.


    1 min
  • திருக்குறள்-19

    குறள் 19:

    தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

    வானம் வழங்கா தெனின்.

    விளக்கம்:

    மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.


    1 min
  • திருக்குறள்:18

    குறள் 18:

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

    விளக்கம்:

    மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

    1 min
  • திருக்குறள்:17

    குறள் 17:

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

    தான்நல்கா தாகி விடின்.

    விளக்கம்:

    ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட  வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும்  அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

    1 min
  • திருக்குறள்:16

    குறள் 16:

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

    பசும்புல் தலைகாண் பரிது.


    விளக்கம்:

    மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

    1 min
  • திருக்குறள்-15

    குறள் 15:

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

    எடுப்பதூஉம் எல்லாம் மழை.


    விளக்கம்:

    பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

    1 min
  • திருக்குறள்-14

    குறள் 14:

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

    வாரி வளங்குன்றிக் கால்.


    விளக்கம்:

    மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

    1 min

About PUMS-KONDAMPATTY KALVI RADIO (PRESENTS FREE ONLINE PODCAST)

From the publisher's feed

மாணவர்களுக்காண பாட கருத்துகள்,பயிற்சி வினா-விடைகள்,திருக்குறள்,கதைகள்,விடுகதைகள்,போன்ற அனைத்தும் ஆடியோவாக பதிவிடப்படும்.அனைவரும் கேட்டுப் பயன் பெறுங்கள்.