
Sign up to save your podcasts
Or


குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் மூன்று பால்களாக பிரித்து அதை 1330 குறள்களாக இயற்றியுள்ளார் வள்ளுவ பெருந்தகை. திருக்குறளில் மொத்தம் மூன்று பால்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால். இப்படி மூன்று பால்களையும் ஒன்றிணைத்து அழகுற இயற்றப்பட்டதால் திருக்குறளிற்கு முப்பால் என்றொரு பெயர் உண்டு. இந்த முப்பாலும் மேலும் ‘இயல்’ என்று பகுக்கப்பட்டு ஒவ்வொரு இயலிற்கு கீழ் சில அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கு கீழும் 10 குறள்கள் என்று தொகுக்கப்பட்டு, மொத்தம் 1330 குறள்களோடு இந்த நூல் உலகபுகழ்பெற்று விளங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளை கொண்டுள்ளது. முதல் அடியில் நான்கும் சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் என மொத்தம் ஏழு சீர்கள் உள்ளது.
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை பற்றிய முழுமையான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இவரை பற்றிய செய்திகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் நமது காதுகளில் ஒலிக்கின்றன. அதன் படி, இவர் சென்னையில் உள்ள மைலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகும், இவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் கூறப்படுகிறது.
நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்கும் இவர், அஹிம்சை மற்றும் சத்யாக்ரஹ வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றார். இதன் மூலமாக அவ்விரு கொள்கைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல; மேலும் அக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்தார். அவரின் இந்த நம்பிக்கையே, அனைவரும் அவரை கவனிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், வரலாறு காணாத மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராகப் போற்றச் செய்தது. அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் உள்ள பெருந்தளைவர்களான மார்ட்டின் லூதர் கிங், ஜேம்ஸ் லாசன், நெல்சன் மண்டேலா, போன்ற பலரும் ஈர்க்கப்பட்டதால், அவர் இன்றளவும் உலகம் முழுவதும் அனைவரின் மனத்திலும் நிலைத்து நிற்கிறார் .இப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ் மொழி இலக்கியங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குகிறது திருக்குறள். வாழ்வியல் நூலான திருக்குறளிற்கு பொய்யாமொழி, முப்பால், உலகப்பொதுமறை, தெய்வநூல் , வாயுறைவாழ்த்து, உத்தரவேதம் இப்படி பல பெயர்கள் உண்டு. கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் இயற்றப்பட்டிருக்க கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்தகைய காலகட்டத்திலேயே யுகங்களை கடந்த பல சிந்தனையியோடு இந்த நூலை இயற்றியுள்ளார் திருவள்ளுவர்.
திருக்குறள்
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.
From the publisher's feed