ஆன்மிகம் கிருஷ்ணா உன்னை தேடுகிறேன் வா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லிப் பணிகளை செய்வார் மூதாட்டி ஒருத்தி தினமும் கோவில் வழிபாடு செய்வார். அடிக்கடி சந்திக்கும் நபர் என்பதால் பாட்டியிடம் நட்புடன் பழகினார் அர்ச்சகர். ஒரு நாள் காலையில் அர்ச்சகர் கோவில் நடை திறந்தபோது அதிர்ந்தார். காரணம் மூலவரின் காதில் சாணம் அப்பியிருந்தது. அன்றாடம் அபிஷேகம் செய்கிறோம். இரவில் பூட்டி விட்டு செல்கிறோம். ஆனால் சாணம் அப்பியது எப்படி என்று சிந்தித்தார். விடை தெரியவில்லை, மறுநாளும் மூலவர் காதில் சாணம் தெய்வ குற்றம் நேர்ந்ததோ என்று வருந்தினார்.
அன்று இரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய கிருஷ்ணர், அர்ச்சகரே உன் மீது குறை இல்லை. பக்தியான மூதாட்டியின் வீட்டில் நடப்பதைப் பார் என்றார் கிருஷ்ணர். அவள் பாடியபடியே வீட்டில் மெழுகி கொண்டிருந்தார். கடைசியில் மீதமிருந்த சாணத்தை ஜன்னல் வழியாக கிருஷ்ணார்ப்பணம் என்றபடி வீசினார். அது பறந்து வந்து கிருஷ்ணரின் காதில் ஒட்டியது. கண் விழித்த அர்ச்சகர் பொழுது புலர்ந்தது கண்டார் நீராடிவிட்டு கோவிலுக்கு புறப்பட்டார். அன்றும் சாணம் இருந்தது. அதை சந்தனமாக கருதி பத்திரப்படுத்தினார். அது பற்றி மூதாட்டியிடம் பேச நினைத்தார், ஆனால் மூதாட்டி வரவில்லை. இரவு மீண்டும் கனவில்.மூதாட்டி என்திருவடியை அடைய போகிறாள். உடனடியாக அவளது வீட்டுக்கு செல் என்று கட்டளையிட்டார் கிருஷ்ணன். அதன்படி சென்ற போது மூதாட்டி இறந்ததை கண்ட விஷ்ணு தூதர்கள் புஷ்பக விமானத்துடன் காத்திருந்தனர். அவர்களிடம் எனக்கு வைகுண்டம் வேண்டாம் என்றென்றும் க்ருஷ்ணரோடவே வாழ விரும்புகிறேன் என்றார் மூதாட்டி. விமானத்தில் மூதாட்டி ஏற்றிய தூதர்கள் கோவிலை அடைந்தனர். நேரில் காட்சியளித்த கிருஷ்ணன் அன்பான பக்தி. என்றென்றும் என்னுடனே நீ இரு என்று அவளை குண்டலமாக மாற்றி அவர் காதில் அணிந்தார். அப்போது நடையை திறந்த அர்ச்சகர் காதில் குண்டலம் அணிந்த கிருஷ்ணர் சிலையை கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
நன்றி
=============================================================================
Seeking Krishna with Devotion
A devout old woman, who surrendered everything to Krishna, used to visit the temple daily for worship. She always chanted, "Sarvam Krishnaarpanam" (Everything is offered to Krishna) while carrying out her tasks. Since she came to the temple regularly, the priest developed a friendly bond with her.
One morning, when the priest opened the temple doors, he was shocked. There was a smear of cow dung on the deity’s ear. "We perform abhishekam (holy bath) every day, and the temple is securely locked at night. How did this happen?" he wondered. The same thing happened the next day too, leaving him puzzled and worried if it was a divine sign.
That night, Krishna appeared in the priest’s dream and reassured him, "You are not at fault. Observe what happens in the old woman’s house."
The next evening, the priest secretly watched her. As usual, she was engaged in her devotional activities, singing Krishna's praises while preparing cow dung cakes. When she was done, she took the leftover dung in her hands, chanted ‘Sarvam Krishnaarpanam,’ and tossed it out through the window as an offering to Krishna. Miraculously, the cow dung had flown straight to Krishna’s idol in the temple and stuck to His ear.
The priest woke up at dawn, bathed, and hurried to the temple. He saw the cow dung on Krishna’s ear again but now viewed it as sacred, treating it like sandalwood paste and preserving it carefully.
That day, the old woman did not come to the temple. The priest wanted to ask her about the incident, but she was absent. That night, Krishna appeared again in his dream and said, "The old woman is about to reach My divine feet. Go to her house immediately."
Following Krishna’s command, the priest rushed to her home. There, he found that she had passed away. Vishnu’s divine messengers stood waiting with a celestial Pushpaka Vimana to take her to Vaikuntha. However, the old woman humbly declined and said, "I do not wish for Vaikuntha. I want to s
Source Link: http://www.youtube.com/@samyukthakarkakasadara8967