சதபத்ரை எனும் சூனியக்காரி மரண தண்டனைக் கைதியாக உள்ளாள். மரண கயிறு அவள் கழுத்தை இறுக்கும் நேரம் அவளுக்கு திடீர் விடுதலை அளிக்கப்படுகிறது. ஏன் என்று புரியாமல் குழம்பித் தவிக்க அந் நாட்டின் இளவரசியை வெண்டிரை எனும் அரக்கர் தீவை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதால் அவளை மீட்க சதபத்ரையின் உதவியை நாடினார் அந்நாட்டின் வேந்தன். முதலில் மறுத்தாலும் பின்பு அரசின் கோரிக்கையை ஏற்று இளவரசியை மீட்க சதபத்ரை கிளம்புகிறாள். அவளோடு கூட அந்நாட்டின் இளவரசன் அதியன் இன்னும் சிலர் சிறு கூட்டமாக கிளம்புகிறார்கள்.
வெண்டிரை தீவிற்கு செல்வதற்குள் இவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் இடிபாடுகள் அதிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வழிகள் என பரபரப்பாக இந்த கதையை எங்களால் முடிந்த அளவிற்கு கொண்டு சென்றுள்ளோம்.. வெண்டிரை தீவிற்கு இறுதியில் இவர்கள் சென்றார்களா? இளவரசியை மீட்டார்களா? இந்தப் பயணம் இறுதியில் எங்கு சென்று முடிகிறது? என்பதே இந்த கதையின் கரு..
கற்பனையான மாய உலகத்தைக் காண விரும்புபவர்கள் இந்த கதையை படிக்கலாம். காதல் நட்பு துரோகம் வீரம் அடிமைத்தனம் ஆளுமை இப்படி அனைத்தும் இந்த கதையில் உள்ளடங்கியுள்ளது.