* திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். கைதான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* பல்லடம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது.
* காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
* இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் 13-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 'ஜி-20 இந்தியா' செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும். விவாதப்பொருள் பட்டியல் தரவில்லை; அதில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
* சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* சேவாக்கின் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன்... இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
* பாரதம் என்ற குடும்பமாக வாழ்வோம்: கவர்னரின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து...
* சனாதனம் குறித்த கருத்துக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
-Solratha Sollitom