Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

By American Tamil RadioNewsNews Commentary
Download on the App Store

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect episodes

  • Thaalaanmai-Vidaamuyarchi-தாளாண்மை – விடாமுயற்சி-நாலடியார் நவிலும் நன்னெறிகள் by Kolandavel Ramasamy

    நாலடியார் நவிலும் நன்னெறிகள். இலக்கியத்துளிகள்-நாலடியாரில் – பொருட்பாலில், அரசு இயலில் தாளாண்மை அதிகாரம் – விடா முயற்சியின் சிறப்புனை விளக்கும் வெண்பாக்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் -தொடர் முயற்சியின் சிறப்பை வலியுறுத்தி சமணமுனிவர்கள் எழுதியுள்ள கருத்துகளை விளக்கும் தெரிந்து எடுக்கப்பட்ட வெண்பாக்கள்- Thaalaanmai-Vidaamuyarchi-தாளாண்மை – விடாமுயற்சி-மார்ச் 14, 2021.

    10 min
  • Thaalaanmai-Vidaamuyarchi-தாளாண்மை - விடாமுயற்சி-நாலடியார் நவிலும் நன்னெறிகள் Kolandavel Ramasamy

    நாலடியார் நவிலும் நன்னெறிகள். இலக்கியத்துளிகள்-நாலடியாரில் - பொருட்பாலில், அரசு இயலில் தாளாண்மை அதிகாரம் - விடா முயற்சியின் சிறப்புனை விளக்கும் வெண்பாக்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் -தொடர் முயற்சியின் சிறப்பை வலியுறுத்தி சமணமுனிவர்கள் எழுதியுள்ள கருத்துகளை விளக்கும் தெரிந்து எடுக்கப்பட்ட வெண்பாக்கள்- Thaalaanmai-Vidaamuyarchi-தாளாண்மை - விடாமுயற்சி-மார்ச் 14, 2021

    ---
    Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
    10 min
  • Leadership in Thirukkural-Part 2 திருக்குறளில் மேலாண்மை-Thirukkural Sinthanaikal by Dr.R.Prabhakaran

    திட்டமிடுதலைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை முந்தைய சொற்பொழிவில் பார்த்தோம். இந்தச் சொற்பொழிவில்,

    மேலாண்மையில் அடங்கிய, கட்டமைத்தல், பணியமர்த்தல், நெறிப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைப் பற்றி வள்ளுவர்

    கூறும் கருத்துக்களை இப்பொழுது பார்ப்போம். மேலாண்மையைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்கள் காலம் நாடு ஆகிய ஆகிய

    எல்லைகளைக் கடந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்கு வழிகாட்டுகின்றன என்பது, ”வள்ளுவன் தன்னை

    உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறிய பாரதியின் கூற்றை உறுதிப்படுத்துகிறது.


    In the previous lecture, Valluvar’s ideas regarding planning was discussed. In this lecture, we

    will discuss Valluvar’s ideas regarding the other tasks of management viz., organizing, staffing,

    directing, and controlling. Valluvar's views on management transcend the boundaries of time

    and nation and still helps all of us . This confirms Bharathiar's claim that "The fact that Valluvar

    was from Tamil Nadu has helped Tamil Nadu to gain great glory."

    31 min
  • Leadership in Thirukkural part 1 திருக்குறளில் தலைமைப்பண்புகள் 1, Thirukkural Sinthanaikal

    அறத்துப்பாலில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அறங்களைக் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் முதல் இருபத்தி ஐந்து அதிகாரங்களில் ஒரு மன்னனுக்குத் தேவையான பண்புகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். தலைவர்கள் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சாமல், அறத்தோடும், விவேகத்தோடும்கூடிய வீரமும் துணிவும் உடையவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஊக்கத்தோடு, சோம்பலும் மறதியும் இன்றிக் காலம் தாழ்த்தாமல் பணியாற்ற வேண்டும். அவர்கள் கல்வியாலும் கேள்வியாலும் அறியவேண்டியவற்றை அறிந்து, தம் அனுபவத்தையும் மனத்தில்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றும், தலைவர்கள் தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரைத் துணையாகக்கொண்டு, சிறியோரடு சேராமல், தம் சுற்றத்தாரோடு அன்போடு பழகி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். தலைவர்கள் தாராளகுணத்தோடும் இரக்கத்தோடும் ஈகையிலும் கொடையிலும் சிறந்து விளங்க வேண்டும். மேலும், அவர்கள் காட்சிக்கு எளியவர்களாக, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் பேசி, இடித்துரைப்போர் கூறுவனவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும். இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியோடு துணிந்து செயல்பட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் முடியாட்சிக் காலத்தில் மன்னனுக்காக, வள்ளுவர் தலைமைப் பண்புகளைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் இன்றைய குடியாட்சிக் காலத்திலும், ஆட்சி செய்பவர்களுக்கும், நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்றவையாக உள்ளன என்பது எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. Brief Description Valluvar discusses righteousness in the first Section of his book, Thirukkural. In the first 25 Chapters of the next Section on Wealth, he discusses how a ruler should rule his country and what qualities he should possess to be an effective leader. The leader should be bold and courageous, and at the same time, his bravery should be tempered by discretion. He should act with enthusiasm and without sloth and forgetfulness. He should be well educated and make decisions based on his knowledge and wisdom. He should consult with elders with more experience and wisdom. He should keep the company of wise and virtuous people and avoid the company of undesirable people. He should be generous and practice charity and donate liberally to deserving artists and scholars. He should be easily accessible to his people, and he should use kind words when dealing with people. When his advisors criticize him, he should listen to their criticism and act according to their advice. Finally, he should overcome all obstacles and persevere in his actions relentlessly. It is indeed remarkable that these ideas of Valluvar on leadership are still valid even after two thousand years. #அஞ்சாமை, #ஈகை, #அறிவு, #ஊக்கம், #தூங்காமை, #கல்வி, #துணிவுடைமை, #அறம், #மறம், #காட்சிக்கு எளியன், #கடுஞ்சொல்லன் அல்லன், #இன்சொல், #செவிகைப்பச் சொல்பொருத்தல், #கொடை, #அளி, #விடாமுயற்சி, #பொச்சாவாமை, #மடியின்மை, #இடுக்கண் அழியாமை, #கண்ணோட்டம், #பெரியோரைத் துணைக்கோடல், #சிற்றினம் சேராமை, #சுற்றம்தழால், #courage, #charity, #knowledge, #energy, #alertness, #learning, #bravery, #virtue, #valor, #easily accessible to his people, #not using harsh words, #speaking kind words, #listening to bitter criticism, #generosity, #graciousness, #persistence, #avoiding arrogant, #thoughtlessness, #not being lazy, #unperturbed under difficulties, #gracious, #compassion, #friendship of the wise, #avoiding the company of undesirable people, #cherishing one’s his associates American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal Epi 24 uploaded on Feb 12, 2021.

    34 min
  • Booker T Washington by Megala Ramamourty ATR-Arivom Arignarkalai-127
    Booker T. Washington was an American educator, reformist, orator, and above all founder of Tuskegee University in Alabama for the educational upliftment of African American people in America.
    அமெரிக்கத் தமிழ் ஊடகம் - அறிவோம் அறிஞர்கள்களை 127.
    புக்கர் டீ. வாஷிங்டன் குறித்து வழங்குபவர் மேகலா இராமமூர்த்தி.
    புக்கர் டீ. வாஷிங்டன் அமெரிக்காவின் சிறந்த கல்வியாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், நாவன்மை மிக்க சொற்பொழிவாளராகவும், அனைத்திற்கும் மேலாகக் கருப்பின மக்களுக்காக அமெரிக்காவிலுள்ள அலபாமாவில் டஸ்கீகீ எனும் பல்கலைக்கழகத்தை நிறுவிய அறிஞராகவும் விளங்குபவர் மாமனிதர் புக்கர் டீ. வாஷிங்டன்.
    ATR-Arivom Arignarkalai-Booker T.Washington-127 by Megala Ramamourty
    14 min
  • G.U.Pope by Megala Ramamourty in ATR Arivom Arignarkalai
    G. U. Pope (George Uglow Pope) was born in Canada and moved to Sawyerpuram near Thoothukudi, TamilNadu at the age of 19 as a Christian missionary. He learned Tamil fondly and translated great Tamil classics: Thirukkural, Naladiyar, and the composition of Saivite Tamil hymns, Thiruvasagam.
    அமெரிக்கத் தமிழ் ஊடகம் - அறிவோம் அறிஞர்கள்களை. ஜி.யூ. போப் குறித்து வழங்குபவர் மேகலா இராமமூர்த்தி.
    ஜி.யூ. போப் - ஜார்ஜ் அக்ளோ போப் என்ற இயற்பெயர் கொண்ட ஜி.யூ. போப், கனடாவில் பிறந்தவர். தமது 19ஆவது அகவையில் கிறித்தவ மதபோதகராகத் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள சாயர்புரத்துக்கு வந்தார். தமிழை விரும்பிக் கற்றுத் திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற சிறந்த தமிழ்நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமகன்.
    Arivom Arignarkalai-G.U.Pope-67 by Megala Ramamourty
    15 min

About Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

From the publisher's feed

Vidukadai: Investigative Journalism episodes where International Politics, Current Affairs and Cultural Activities are discussed and debated.