அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 91 - அரசாங்கச் செயலில் வெற்றி பெற
    மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்
    புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை
    சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்
    பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.
    9 min
  • Song 90 - கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
    வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
    இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
    பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
    விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
    9 min
  • Song 89 - யோக சித்தி பெற
    சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
    துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
    உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்ற, அறிவு
    மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.
    10 min
  • Song 88 - எப்போதும் அம்பிகை அருள் பெற
    பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்
    தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்
    புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்
    சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!
    9 min
  • Song 87 - செயற்கரிய செய்து புகழ் பெற
    மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
    விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
    அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
    பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே.
    7 min
  • Song 86 - ஆயுத பயம் நீங்க
    மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
    காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
    வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
    பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.
    9 min
  • Song 85 - துன்பங்கள் நீங்க
    பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு
    ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
    தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
    வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.
    8 min
  • Song 84 - சங்கடங்கள் தீர
    உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
    சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
    இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
    படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
    8 min
  • Song 83 - ஏவலர் பலர் உண்டாக
    விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
    இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
    பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்
    உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.
    9 min
  • Song 82 - மன ஒருமைப்பாடு அடைய
    அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
    ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
    களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,
    வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன்.
    8 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.