அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 81 - நன்னடத்தை உண்டாக
    அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
    வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
    இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
    பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.
    7 min
  • Song 80 - பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
    கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை
    ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
    காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
    ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.
    9 min
  • Song 79 - கட்டுகளில் இருந்து விடுபட
    விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
    பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.
    10 min
  • Song 78 - சகல செல்வங்களையும் அடைய
    செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
    அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்
    கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
    துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே.
    8 min
  • Song 77 - பகை அச்சம் நீங்க
    பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்
    உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
    வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
    செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.
    9 min
  • Song 76 - தனக்கு உரிமையானதைப் பெற
    குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
    மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
    வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
    பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.
    8 min
  • Song 75 - விதியை வெல்ல
    தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
    மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
    பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
    கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
    9 min
  • Song 74 - தொழிலில் மேன்மை அடைய
    நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
    அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
    பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
    சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
    8 min
  • Song 73 - குழந்தைப் பேறு உண்டாக
    தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
    யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
    சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
    நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.
    9 min
  • Song 72 - பிறவிப் பிணி தீர
    என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
    நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்
    மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
    தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.
    8 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.