அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 71 - மனக்குறைகள் தீர

    அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்

    பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
    குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
    இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

    7 min
  • Song 70 - நுண் கலைகளில் சித்தி பெற
    கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
    பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
    மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
    பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
    8 min
  • Song 69 - சகல சௌபாக்கியங்களும் அடைய
    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
    மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
    இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
    கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
    8 min
  • Song 68 - நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

    பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,

    ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
    சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
    சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.

    8 min
  • Song 67 - பகைவர்கள் அழிய
    தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
    மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
    கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்
    பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.
    10 min
  • Song 66 - கவிஞராக
    வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
    பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
    வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
    சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.
    10 min
  • Song 65 - ஆண்மகப்பேறு அடைய
    ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
    தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
    முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
    மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!
    8 min
  • Song 64 - பக்தி பெருக
    வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
    பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
    பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
    காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.
    7 min
  • Song 63 - அறிவு தெளிவோடு இருக்க
    தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
    கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
    ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
    வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.
    7 min
  • Song 62 - எத்தகைய அச்சமும் அகல
    தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
    வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
    கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
    செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.
    7 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.