அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 51 - மோகம் நீங்க
    அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
    முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
    சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
    மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
    8 min
  • Song 50 - அம்பிகையை நேரில் காண
    நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
    சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
    வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
    ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
    7 min
  • Song 49 - மரணத் துன்பம் இல்லாதிருக்க
    குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
    வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
    அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
    நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
    9 min
  • Song 48 - உடல் பற்று நீங்க
    சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
    படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
    இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
    குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
    7 min
  • Song 47 - யோகநிலை அடைய
    வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
    வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
    ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
    சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
    8 min
  • Song 46 - நல்நடத்தையோடு வாழ
    வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
    பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
    கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
    மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!
    7 min
  • Song 45 - உலகோர் பழியிலிருந்து விடுபட
    தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
    பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
    கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
    மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.
    9 min
  • Song 44 - பிரிவுணர்ச்சி அகல
    தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
    அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
    இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
    துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
    7 min
  • Song 43 - தீமைகள் ஒழிய
    பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
    திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
    பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
    எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
    7 min
  • Song 42 - உலகினை வசப்படுத்த
    இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
    வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
    நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
    படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.
    8 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.