அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 31 - மறுமையில் இன்பம் உண்டாக
    உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
    எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
    சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
    அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே
    10 min
  • Song 30 - அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
    அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
    நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
    சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
    ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!
    7 min
  • Song 29 - எல்லா சித்திகளும் அடைய
    சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
    பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
    முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
    புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.
    8 min
  • Song 28 - இம்மை மறுமை இன்பங்கள் அடைய
    சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
    புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
    அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
    செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
    9 min
  • Song 27 - மனநோய் அகல

    உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு

    படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
    அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
    துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

    10 min
  • Song 26 - சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
    ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
    காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
    சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
    நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
    8 min
  • Song 25 - நினைத்த காரியம் நிறைவேற
    பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
    முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
    அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
    என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
    7 min
  • Song 24 - நோய்கள் விலக
    மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
    அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
    பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
    பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
    7 min
  • Song 23 - எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
    கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
    விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
    உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
    கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
    6 min
  • Song 22 - இனிப் பிறவா நெறி அடைய
    கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
    படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
    பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
    அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.
    6 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.