அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 41 - நல்லடியார் நட்புப் பெற
    புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
    கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
    நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
    பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.
    7 min
  • Song 40 - பூர்வ புண்ணியம் பலன்தர
    வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
    பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
    காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
    பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
    8 min
  • Song 39 - கருவிகளைக் கையாளும் வலிமை பெற
    ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
    மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
    மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
    மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!
    8 min
  • Song 38 - வேண்டியதை வேண்டியவாறு அடைய
    பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
    தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
    துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
    அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
    6 min
  • Song 37 - நவமணிகளைப் பெற
    கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
    மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
    பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
    திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
    7 min
  • Song 36 - பழைய வினைகள் வலிமை பெற
    பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
    மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
    இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
    அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!
    9 min
  • Song 35 - திருமணம் நிறைவேற
    திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
    எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
    தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
    வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
    9 min
  • Song 34 - சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
    வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
    தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
    பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
    செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.
    9 min
  • Song 33 - இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
    இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
    அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
    குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
    உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
    11 min
  • Song 32 - துர்மரணம் வராமலிருக்க
    ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
    பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
    வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
    நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!
    7 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.