அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 21 - அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
    மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
    சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
    பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
    பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.
    8 min
  • Song 20 - வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
    அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
    நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
    மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
    7 min
  • Song 19 - பேரின்ப நிலையடைய
    வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
    களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
    தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
    ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
    10 min
  • Song 18 - மரண பயம் நீங்க
    வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
    செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
    அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
    வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.
    6 min
  • Song 17 - கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
    அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
    துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
    பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
    மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.
    10 min
  • Song 16 - முக்காலமும் உணரும் திறன் உண்டாக
    கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
    ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
    வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
    அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
    8 min
  • Song 15 - பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
    தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
    மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
    விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
    பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
    7 min
  • Song 14 - தலைமை பெற
    வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
    சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
    பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
    சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.
    9 min
  • Song 13 - வைராக்கிய நிலை எய்த
    பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
    காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
    மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
    மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
    8 min
  • Song 12 - தியானத்தில் நிலைபெற
    கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
    பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
    நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
    புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
    9 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.