அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

By Abhirami Andadhi by VijiReligion & SpiritualitySpirituality
Download on the App Store

அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar episodes

  • Song 11 - இல்வாழ்க்கையில் இன்பம் பெற
    ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
    வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
    தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
    கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.
    7 min
  • Song 10 - மோட்ச சாதனம் பெற
    நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
    என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
    ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
    அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
    10 min
  • Song 09 - அனைத்தும் வசமாக
    கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
    பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
    திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
    முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.
    7 min
  • Song 08 - பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
    சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
    வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
    அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
    சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
    7 min
  • Song 07 - மலையென வரும் துன்பம் பனியென நீங்க
    ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
    கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
    மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
    துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
    7 min
  • Song 06 - மந்திர சித்தி பெற
    சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
    மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
    முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
    பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.
    7 min
  • Song 05 - மனக்கவலை தீர
    பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
    வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
    அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
    திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
    7 min
  • Song 04 - உயர் பதவிகளை அடைய
    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
    குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
    பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
    7 min
  • Song 03 - குடும்பக் கவலையிலிருந்து விடுபட
    அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
    செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
    பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
    மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
    7 min
  • Song 02 - பிரிந்தவர் ஒன்று சேர
    துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
    பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
    கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
    அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.
    8 min

About அபிராமி அந்தாதி (Abhirami Andadhi) by Dr. Vijayalakshmi Ramshankar

From the publisher's feed

Abirami Andadi is a collection of 100 poems composed by Abirami Bhattar. Goddess Abirami changed a new moon night with no moon to a full moon night with a tadangam ..a jewel of her ear for her devotee Shri Subramanya bhattar..later called Abirami Bhattar. The incident happened on Thai Ammavasai.