Matthew 13:38-40,43
38 நிலம் உலகம், நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்,
மத்தேயு 13:38
39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு, அறுப்பு உலகத்தின் முடிவு, அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
மத்தேயு 13:39
40 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
மத்தேயு 13:40
43 அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
மத்தேயு 13:43
Matthew 13:38-40,43 NKJV
The field is the world, the good seeds are the sons of the kingdom, but the tares are the sons of the wicked one.
[39] The enemy who sowed them is the devil, the harvest is the end of the age, and the reapers are the angels.
[40] Therefore as the tares are gathered and burned in the fire, so it will be at the end of this age.
[43] Then the righteous will shine forth as the sun in the kingdom of their Father. He who has ears to hear, let him hear!
19 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான், அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
லூக்கா 16:19
20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான், அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
லூக்கா 16:20
21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியைஆற்ற ஆசையாயிருந்தான், நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
லூக்கா 16:21
22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
லூக்கா 16:22
23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
லூக்கா 16:23
24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும், இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
லூக்கா 16:24
25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
லூக்கா 16:25
26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
லூக்கா 16:26
27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு,
லூக்கா 16:27
28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
லூக்கா 16:28
29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான்.
லூக்கா 16:29
30 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
லூக்கா 16:30
31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
லூக்கா 16:31
Luke 16:19-31 NKJV
"There was a certain rich man who was clothed in purple and fine linen and fared sumptuously every day.
[20] But there was a certain beggar named Lazarus, full of sores, who was laid at his gate,
[21] desiring to be fed with the crumbs which fell from the rich man's table. Moreover the dogs came and licked his sores.
[22] So it was that the beggar died, and was carried by the angels to Abraham's bosom. The rich man also died and was buried.
[23] And being in torments in Hades, he lifted up his eyes and saw Abraham afar off, and Lazarus in his bosom.
[24] "Then he cried and said, 'Father Abraham, have mercy on me, and send Lazarus that he may dip the tip of his finger in water and cool my tongue; for I am tormented in this flame.'
[25] But Abraham said, 'Son,