Sadhguru talks about the story of mysterious birth of Lord Muruga.
ஆறுபேர் ஓர் உடல் கொண்ட அதிசயம்! Subramanya, A mysterious birth!
தாயின் கருவறையில் வளர்ந்த குழந்தைகளின் கதை தெரியும். அப்சர பெண்களின் கருவில் வளர்ந்து, குறைபிரசவத்திற்குபின் தாமரை இலையில் போத்தி வளர்க்கப்பட்ட அதிசயக் குழந்தை குமரனைப் பற்றி பேசுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. விநாயகச் சதுர்த்தி அன்று விநாயகரை மட்டும் விட்டு வைப்பானேன், குமரனின் அண்ணன் தலைபெற்றக் கதையையும் இந்த வீடியோவில் விவரிக்கிறார் சத்குரு...
மரணமில்லா பெருவாழ்வு
மேலே நாம் கண்ட வீடியோ மரணமில்லா பெருவாழ்வு என்னும் டிவிடியிலிருந்து எடுக்கப்பட்டது.
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா தனக்கு எழுந்த கேள்விகளை சத்குரு அவர்களிடம் கேட்க அந்த உரையாடல் "மரணமில்லா பெருவாழ்வு" என்னும் ஆழம் பொதிந்த ஒளிப்பேழையாய் உருபெற்றது. இந்த ஒளிப்பேழையில், நாம் உணராத பல ஆன்மீகப் பரிமாணங்களை அதன் உண்மையான அர்த்தத்துடன் விளக்குகிறார் சத்குரு. சென்ற வருடம் நம் மையத்தினரால் வெளியிப்பட்ட இந்த டிவிடி, காண்போர் மனதை கொள்ளைக் கொண்டது உண்மை. தற்சமயம் ஆன்லைனிலும் விற்பனைக்கு உள்ளது.
மரபின் மைந்தன் அவர்கள் சத்குருவிடம் எழுப்பிய கேள்விகளில் சில...
· தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் உடலை உகுத்த இடம், எந்த நிலையில், எங்கே உடல் நீத்தார்? அந்த இடம் இப்போது எங்கே இருக்கிறது?
· முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் இவர்களுக்குள் என்ன வித்தியாசம்?
· சித்தர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்களே? இது உண்மையா?
· வள்ளலார் உடலோடு காற்றில் கலந்ததாக சொல்கிறார்கள், அது சாத்தியம்தானா?
· திருஞானசம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் முக்தி கிடைத்ததாக சொல்கிறார்களே...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices