எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • யாழ்ப்பாண வருகையின் முதற் 10 ஆண்டு நிறைவும் கிறீன் அமெரிக்காவுக்குத் திரும்புதலும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பா. துவாரகன்

    ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக 'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு' என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.


    9 min
  • கிழார்களின் வம்ப வேந்தர் | தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன்

    கி. மு. 3ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற சேரர், பாண்டியர், சோழர் எனும் முடிவேந்தர்கள் மூவரது பேரரசு எழுச்சிகளுடனேயே தமிழர் வரலாற்றுத் தொடக்கம் ஏற்பட்டதான ஆய்வு முடிவுகள் நிலைபேறுடையனவாக நிலவிவந்தன. மூவேந்தர் எழுச்சியுடன் பேரரசுகள் தோன்றுவதில் வாய்மொழி இலக்கியத்தின் பங்குப் பாத்திரம் குறித்த பேராசிரியர் க. கைலாசபதியின் ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடு பெரும் தாக்கத்தை விளைவித்தது. மூவேந்தர்கள் பற்றி அசோகனின் கல்வெட்டுகள் குறிப்பிட்ட நிலையில் இங்கு கண்டறியப்பட்ட எழுத்துகளும் அசோகச் சக்கரவர்த்திக்குப் பின்னரானது என்ற கருத்தும் வலுத்திருந்தது.

    சோகச் சக்கரவர்த்திக்குப் பின்னரானது என்ற கருத்தும் வலுத்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அசோகனுக்கு முந்திய ‘தமிழி எழுத்துகள்’ தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகள் வாயிலாக கண்டறியப்பட்ட பின்னர் புதிய சிந்தனைகள் எழுந்தன.

    கல்வெட்டுகளுக்கு அப்பால் பானையோடுகளில் தமிழ்ப் பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்ட போது வரலாற்றுத் தொடக்கம் பற்றிய மறுவாசிப்புகள் அவசியப்பட்டன. கைத்தொழில் விருத்திப் பொருட்கள் உட்பட கி.மு. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழி எழுத்தில் பானையோடுகளைத் தமிழர் சமூகம் கொண்டிருந்தமையைக் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தியதனை பேராசிரியர் க. ராசன் பேசுபொருளாக்கி இருந்தார்.

    வாய்மொழி இலக்கிய எழுச்சி வாயிலாக வரலாற்றுத் தொடக்கம் - முன்னரே புழக்கத்தில் இருந்த எழுத்துப் பயன்பாடு என்ற இரு முனை விவகாரங்களுக்கு உரிய முரண் பற்றிய தெளிவை எட்டும் போது தமிழர் தனித்துவத்துக்கான அடிப்படையை விளங்கிக்கொள்வோம்.

    மறுக்கவியலாத தொல்லியல் சான்றாக கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் தமிழி எழுத்தாக்கம் உருவாகத் தொடங்கி விருத்திபெற்று வந்ததனை வைத்து ’வீரயுக இலக்கியம்’ வாய்மொழிப் பண்புடையது என்ற கருத்தாக்கத்தை மறுப்பவர்களது வாதம் வலுப்படுவதாக எண்ணுகிறவர்களும் உள்ளனர்.

    கொடுமணலில் கிடைத்த பொருட்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் வீறுடன் தமிழக வரலாற்று எழுச்சி ஏறுதிசையில் வேகமாக இயங்கி வந்தமையைக் காட்டியிருந்த போதிலும் அவற்றுக்குத் தளமாக அமையத்தக்க கட்டுமானங்கள் போதியளவில் கண்டறியப்படவில்லை. வைகைக் கரை நகரப் பண்பாட்டை வெளிப்படுத்திய கீழடி அகழ்வாய்வுகள் பலவகைத் தெளிவுகளை வந்தடைய உதவின.

    கி.மு. 7ஆம் நூற்றாண்டு எழுச்சியுறத் தொடங்கிய நகரக் கட்டுமானமும் எழுத்துருவாக்கமும் ஒரு நூற்றாண்டின் பின்னர் செழுமையுடன் விருத்திபெற்று அமைந்தமையைக் கீழடியில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களும் அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களும் எடுத்துக் காட்டுகின்றன.

    கி.மு. ஆயிரமாம் ஆண்டில் இரும்புப் பயன்பாடு பரவலானதுடன் தமிழகத்திலேயே வலுவான உருக்கு உற்பத்தி சாத்தியப்பட்டதன் விளைவாகத் தான் தமிழகத்தின் எழுச்சி வீறுகொள்ளத் தொடங்கியது. பின்னரான நாலைந்து நூற்றாண்டுகளில் ஏற்பட்டு வந்த விருத்தியையே கொடுமணல், கீழடி, சிவகளை போன்ற பல்வேறு இடங்களிலான தொல்லியல் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

    21 min
  • தமிழர் பற்றிக் குறிப்பிடும் பிற்காலக் கல்வெட்டுக்கள் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

    இலங்கையில் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு அதாவது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பின்பு 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலே சில கல்வெட்டுக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. இவை தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன.


    பொ. ஆ. 853 முதல் 887 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையை ஆட்சிசெய்த 2 ஆம் சேனன் காலத்தில் கிபிஸ்ஸ கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சிகிரியாவின் தென்மேற்கில் 4 கி.மீ தூரத்தில் உள்ள கிபிஸ்ஸ என்னுமிடத்தில் உள்ள வாவல வெவ எனும் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 1973 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.

    இக்கல்வெட்டு ஒரு தூணில் எழுதப்பட்டிருந்தது. அப்போது இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்த தூண் பல துண்டுகளாக உடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தூணின் மேல் பகுதியில் உள்ள இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. ஏனைய துண்டுகள் காணப்படவில்லை.

    கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த சிங்கள எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளன. இதில் மன்னனால் வழங்கப்பட்ட ஒரு நன்கொடை பற்றிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ சங்கபோ எனும் மன்னனின் 32ஆவது ஆட்சி ஆண்டில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இவன் 2ஆம் சேனன் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

    “இசா தெமழ அதிகார ..”
    “பொதில் சோழியா ரதுன் வெதெர் மென்..”

    இது “திறை பெறுவதற்காக சோழநாட்டின் ஆணையுடன் வந்த தமிழ் அதிகாரி” எனப் பொருள்படுகிறது. இத்தமிழ் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் 13ஆம் வரியில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் சிதைந்து காணப்படுகின்றன. எனவே இத்தமிழ் அதிகாரியின் பெயரைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

    2ஆம் சேனன் காலத்தில் (பொ. ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்ட நாச்சதூவ கல்வெட்டிலும் தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரத்தின் தென்கிழக்கில் 15 கி.மீ தூரத்தில் நாச்சதூவ குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் அருகில் உள்ள நாச்சதூவ கிராமத்தில் 1911 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

    8 min
  • புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - I | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    ஈழத் தமிழர்களின் மரபுரிமையைப் (Heritage) பாதுகாப்பதற்கான ஒரு வழிவரைபடத்தை இந்தக் கட்டுரை உருவாக்க முயல்கிறது. இன்று, 'ஈழத் தமிழர்கள்' என்ற பதப் பிரயோகம் புவியியல் ரீதியாக இலங்கைத் தீவுக்குள் வாழுகின்ற சிறுபான்மைத் தமிழர்களை மட்டுமின்றி, உலகில் வேறு எந்தப் பாகத்திலும் வாழும் இலங்கைத் தீவைச் சேர்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொண்ட கூட்டு அடையாளத்தைக் குறிக்கிறது. இன்று  அது தன்  புவியியல் எல்லை கடந்த உணர்வுத் திரட்சி; ஒடுக்குமுறையும், மனக்காயங்களும் கட்டமைத்த ஒரு தேசம்.



    ஈழத் தமிழர் மரபுரிமை என்பது உள்நாடு மற்றும் புலம்பெயர்ந்த நிலங்கள் என்ற இருமடிப்புடைய ஒரு கூட்டுப் பிரதிநிதித்துவம் ஆகும். ஒரு தலைமுறை,  நாடு கடந்தது; இன்னொரு தலைமுறை, புதிய நிலங்களில் பிறந்தது; தமிழ் அதன் அரசியற் பண்பாட்டுத் தளத்தில் இருந்து பல மொழியாற் பேசியத் தொடங்கியது.

    ஒரு சமூகத்தின் அடையாளத்தை, அதன் கடந்த காலத்து சமூக வரலாற்று பின்னணியில் கட்டியெழுப்புவதற்கு மரபுரிமை இன்றியமையாதவொரு கருவியாக காணப்படுகிறது. அதனடிப்படையில் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கட்டமைப்புசார் பண்பாட்டு இனப்படுகொலைப் (cultural genocide) பின்னணியில் அதற்கெதிரான எதிர்ப்பு அரசியல் திட்டத்தில் – ‘மரபுரிமைப் பாதுகாப்பு’ என்பது மிக அத்தியாவசியச் செயற்பாடாக காணப்படுகிறது.


    மரபுரிமையின் முக்கியத்துவம் பற்றிய அறியாமையாலும், அதனை உதாசீனஞ் செய்தலாலும், ஈழத் தமிழர்களே இந்த மரபுரிமை அழிப்பின் பிரதானமான முகவர்களாக உள்ளனர் என்பதுதான் மிகத் துரதிர்ஷ்டவசமான வரலாற்று யதார்த்தமாகக் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ‘தங்கள் வேர்களைத் தாங்களே அடியோடு பிடுங்கியும்’, தங்கள் தொண்டையைத் தாங்களே அறுத்தும் மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வரலாற்றிற் காணப்படும் முரண்மிகுந்த யதார்த்தமாகும்.

    21 min
  • உருத்திரபுரத்தில் நாகரமைத்த புராதனமான கோயில்கள் | பேராசிரியர் சி.பத்மநாதன்

    வட, கிழக்கு மாகாணங்களிலே அம்பாறைத் தேர்தல் தொகுதி தவிர்ந்த இடங்கள் பலவற்றில் மிக அண்மைக் காலத்தில் நடைபெற்ற கள ஆய்வுகளின் விளைவாக, ஆதிவரலாற்றுக் காலத்திலே (கி.மு.300-கி.பி.400) தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிய நிலையில் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  வவுனியா அருங்காட்சியகத்திற் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் மூலமாகவும் இக்கருத்து உறுதியாகின்றது.


    வன்னியிலே காணப்படும் பௌத்த சின்னங்கள் எல்லாம் அங்கு வாழ்ந்த சிங்கள மக்களின் அடையாளங்கள் என்ற தவறான கருத்தினை ஹீயூ நெவில் (Hugh Neville) முன்னிலைப்படுத்தினார்.  புரிந்துணர்வில்லாது அவர் சொன்னவை சுருதிப் பிரமாணமாகக் கொள்ளப்பட்டன.  அது வரலாற்று ஆசிரியர்களுக்கும் அரச சார்புடைய தொல்லியல் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கும் வலிமையான நம்பிக்கையாகிவிட்டது.  ஆனால் அவருக்கு முன்பு நீரப்பாசனமுறை பற்றி ஆய்வுகள் செய்த ஹென்றி பார்க்கர் (Henry Parker) வேறு விதமான கருத்தை வெளிப்படுத்தினார்.  தமிழ்ப் பேசும் நாகரே மண்மலைக் குளத்தைக் (முத்தையன்கட்டு) கட்டினார்கள் என்றும் வன்னியில் வாழ்ந்த பௌத்தர்கள் தமிழராய் இருக்கக்கூடும் என்னும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பார்க்கர் பதிவு செய்துள்ள கருத்துகள் மிக அண்மைக் காலத்திலே கள ஆய்வுகளின் மூலம் கிடைத்த விபரங்களால் உறுதி பெறுகின்றன.  தமிழ்ப் பிராமி வரிவடிவங்களிலே தமிழ்ப் பெயர்கள் பொறித்த பல நூற்றுக் கணக்கான தொல்பொருட் சின்னங்கள் கிடைத்துள்ளன.  அவை வழிபாட்டுச் சின்னங்கள், பாவனைப் பொருட்கள் என இரு வகைப்படும்.  அவை அனைத்தும் நாகரோடு தொடர்புடையவை நாகசிற்பங்களிலும், சிவலிங்கம், நந்தி, மயூரம் முதலானவற்றிலும் புத்தர்பாதம், புத்தர் படிமம் போன்றவற்றிலும் மணிணாகன் என்ற பெயரை எழுதுவது வழக்கம்.  வழிபாட்டிற்குரிய தெய்வங்களையும் அவற்றோடு தொடர்புடைய சின்னங்களையும் நாகர் மணிணாகன் என்றே குறிப்பிட்டனர்.  அதுபோல நாகர் கோட்டம், சைவக்கோயில், பௌத்தப் பள்ளி, சேதியம் போன்ற வழிபாட்டு நிலையங்களை மணிணாகன் பள்ளி என்று குறிப்பிட்டனர்.


    தொல்லியல் திணைக்களத்தினர் தங்கள் பாதுகாப்புத் தலம் என அடையாளப்படுத்திய நிலத்திற்கு வெளியே அதற்கண்மையிலுள்ள ஒரு மரத்தின் கீழே சில செங்கற்களும் தூண்துண்டங்களும் காணப்படுகின்றன.  அவற்றைச் சுத்தம் பண்ணி, நீரினாற் கழுவிய பின் அவற்றிலே தமிழ்ப் பிராமி எழுத்துகள் தெரிந்தன; தமிழ்ப் பெயர்களும் வசனங்களும் தெரிந்தன, அவை நாகர் பற்றியவை.  நாகரின் கல்லறைகளிற் காணப்படும் இரு வசனங்களும் இவற்றிலே பதிவாகி உள்ளன.

    13 min
  • பழவகைகள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

    பலாப்பழம்

    பதினேழாம் நூற்றாண்டில் தனது பதினான்காவது வயதில் கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனால் சிறைபிடிக்கப்பட்டு, பத்தொன்பது வருடங்கள் கண்டியிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர் ரொபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர். இவர் அக்காலப்பகுதியில் பொதுமக்களின் உணவில் பலாக்காயின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கியுள்ளார். பண்டைய நாட்களில் சிங்கள மக்களின் உணவில் அரிசிக்கு அடுத்த பெரும்பங்கு வகித்தவை பலாக்காய், பலாவித்து, பலாப்பழம் ஆகியவையே என்பதை இவர் எழுதிவைத்துள்ள நூலின் வாயிலாக அறிந்துகொள்ளமுடிகிறது.

    சிங்களவர்களைப்போல் பலாக்காயை வெறுமனே அவித்தோ கறியாகச் சமைத்தோ உண்ணும் வழக்கம் தமிழரிடம் இல்லை. ஆனால் பலாக்கொட்டையை ஒடியல்கூழில் சேர்க்கும் வழக்கம் உள்ளது.


    ஒரு கோப்பை அளவிலான பலாப்பழச் சுளைகளில் மிகக்குறைந்த அளவிலிலேயே கொழுப்புச்சத்து உள்ளது. அதேசமயம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C, A, B6 என்பன அதிக அளவில் உள்ளன.

    விளாம்பழம்

    விளாம்பழத்தில் உள்ள beta-carotene என்னும் இரசாயனம் ஈரலுக்கு நல்லது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் விளாம்பழம் நல்லது என்று கூறப்படுகிறது. இவர்கள் இதனைத்தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். வைட்டமின் C யும் இந்தப்பழத்தில் நிறையவே உண்டு


    மாம்பழம்
    மாம்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு என்பதை மறுப்பதற்கில்லை. சீனிச்சத்து கூடுதலாக இருப்பதால் மாம்பழம் சாப்பிடுவதற்கு நீரிழிவு நோயாளர் தயங்குவர். எனினும் வாழைப்பழம் உருளைக்கிழங்கு என்பவற்றுடன் ஒப்பிடுகையில் மாம்பழம் இவர்களுக்கு அதிக பிரச்சினையை ஏற்படுத்தாது. மாம்பழத்துடன் சேர்த்து பருப்பு வகைகள் கொழுப்புக் குறைந்த பால், தயிர், கிழங்குகள் தவிர்ந்த காய்கறிகள் என்பவற்றை உண்பதன்மூலம் நீரிழிவு நோயாளர் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

    மாதுளம்பழம்

    ஆரோக்கியத்தைத்தரும் மிகச்சிறந்த உணவுகளில் ஒன்றாக மாதுளம்பழம் பலராலும் அறியப்பட்டு வந்துள்ளது.

    ஒட்சியெதிரிகள் நிறைந்த மாதுளம் பழம் இருதய வியாதிகளால் தோன்றும் அபாயத்தைக் குறைப்பதாக நம்பப்படுகிறது. மூளை முதிர்ச்சியடைவதைக் குறைக்க உதவும் வைட்டமின் E மற்றும் வைட்டமின் A, C, இரும்புச்சத்து என்பன செறிவாக உள்ளன.

    உயர் இரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கும் இது சிறந்த உணவாகும். இரத்த அழுத்தத்தை மாதுளம்பழம் குறைக்கின்றது.

     மாதுளம்பழம் சாப்பிட்டுவரும் ஒரு ஆண்மகனுக்கு வயாக்ரா என்பது தேவைப்படாது என்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள குயீன் மார்கிரெட் பல்கலைக்கழகத்தை (Queen Margaret University, Edinburgh) சேர்ந்த ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு இது.

    15 min
  • தந்திரோபாயமற்ற தமிழர் போராட்டங்கள் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

    அடையாள அரசியல்  என்றால் என்ன என்ற  கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இந்தத்தொடர் முனைகிறது.

    21 min
  • விவசாயப் புரட்சியும் சூழல் மாற்றமும் | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கந்தையா பகீரதன்

    இரண்டாம் உலகப் போருக்காக ஆயுதங்கள் மற்றும் போர் உபகரணங்களை உற்பத்தி செய்ய உருவாக்கப்பட்ட இரும்பு, உருக்கு, மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் எந்த உழைப்புமில்லாமல் ஐரோப்பா முழுவதும் பூட்டப்பட்டிருந்து. இந்த நேரத்தில் தான் 1940களில் மெக்சிக்கோவில் விவசாய நடைமுறைகளின் மறுசீரமைப்பு தொடங்கியது. இந்த விவசாய மறுமலர்ச்சித் திட்டங்கள் காரணமாக 1950கள் மற்றும் 1960களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய உயர் ரக கோதுமை இனங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உணவு உற்பத்தி ஏக்கருக்கு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது.



    பசுமைப் புரட்சி வெற்றியடைந்த போதிலும், பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், பல எதிர்மறையான குறிப்பிடத்தக்க தாக்கங்கள் எழுந்தன. பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பிரத்தியேக ஆய்வுகள் பல நடாத்தப்பட்டன

    20 min
  • யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் எண்ணெய் வகைகள் | மாறுபாடில்லா உண்டி | Dr தியாகராஜா. சுதர்மன்

    எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் எண்ணெய் வகைகளின் பாவனையானது மட்டுப்படுத்தியதொன்றாகவே இருந்து வந்துள்ளது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் தனியே கொழுப்பு உணவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சமையலின்போது எண்ணெய் வகைகளானது பொரித்தல், தாளித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது.


    மாப்போசணைக் கூறுகளில் ஒன்றான கொழுப்புச்சத்துக்கு, மாமிச உணவு உண்பவர்களாயினும் சரி, சைவ உணவு உண்பவர்களாயினும் சரி பெரிதும் தங்கியிருப்பது தேங்காய்ப்பால், பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பனவற்றில் ஆகும்.

    காலப்போக்கில் வர்த்தக நோக்கில் எண்ணெய்களைச் சுத்திகரித்துக்கொள்ளும் (Refined) போதும், அதிக அளவில் உணவுகளில் உடலுக்கு ஒவ்வாத கொழுப்புக்களே (Trans fat - இது கெட்ட கொழுப்பினை (Low Density Lipoprotein) அதிகரிக்கும்) கிடைக்கின்றன.

    தேங்காய் எண்ணெய்  அதிகளவில் நிரம்பிய கொழுப்பமிலங்களைக் கொண்டிருப்பதினால்  உடலுக்கு கேடுதரக்கூடிய கொழுப்புக்கள் உருவாகுவதில்லை. ஆனால் நாம் இன்று பாரம்பரியமாகச் சமையலுக்குப் பாவித்துவந்த தேங்காய் எண்ணெயை விட்டுவிட்டு கேடுதரக்கூடிய பாம் எண்ணெய் , மரக்கறி எண்ணெய்  போன்ற  எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றோம். அதேவேளை தேவையான அளவைவிட அதிகளவில் பாவிக்கும்போது தேங்காய் எண்ணெயும் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.

    நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பன எமது பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானவை. அவற்றில் மருத்துவக் குணங்கள் அதிகமாக இருந்தாலும் அவற்றினை மிகையாகப் பயன்படுத்த வேண்டாம் என்றே சித்தமருத்துவம் கூறுகின்றது. மிகையாகப் பயன்படுத்தும்போது அவை உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என குறிப்பிடப்படுகின்றது.

    நல்லெண்ணெய், உடலுக்கு இளமையையும் ஒளியையும் கொடுக்கும், கண்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும், கண்நோய்கள் மாறும். சுவாச தொடர்பான நோய்களும் மாறும்,புண்களில் ஏற்படும் வலியையும் சதை வளர்ச்சியையும் குறைக்கும்,அதிகரித்த கபமும், வாதமும் நீங்கி சிரசுக்கான இரத்தம் சீராகப்போக வழிசமைக்கும்.

    இலுப்பை எண்ணெய் ஆனது தேங்காய் எண்ணையைப் போன்று நிரம்பிய கொழுப்பமிலங்களை அதிகம் கொண்டது. பாரம்பரியமாக இலுப்பை எண்ணெயை ஒரு தடவை அடுப்பிலேற்றி காய்ச்சிய பின்னரே பயன்படுத்தலாம்.

    எண்ணெய் வகைகள் சரியான அளவில் பயன்படுத்தும் போது நன்மையைத் தரக்கூடியன. அதேபோல் அளவுக்கு அதிகமாகும்போது அதே அளவு தீமையைத் தரக்கூடியனவாகும்.

    15 min
  • ‘நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ ஜொகான் சண்முகரத்தினம் எழுதிய நோர்வேஜிய மொழிப் புத்தகம் - ஒரு பார்வை | திக்குகள் எட்டும் | ரூபன் சிவராஜா

    அமெரிக்க கருப்பினத்தவரான George Floyd அமெரிக்க வெள்ளையினக் காவல்துறையினால் குரல்வளை நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட போது George Floyd இருபது தடவைகள் சொன்ன 'ஒரே வார்த்தை'.  அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளாவிய அதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் தோற்றுவித்திருந்தது. பல்வேறு நாடுகளில் இன-நிறவெறிக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரண்டனர். ‘Vi puster fortsatt - நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ - இது ஜொகான் சண்முகரத்தினம் எழுதி இந்த ஆண்டு, ஒக்ரோபர் மாதம் வெளிவந்த புத்தகம்.

    George Floyd படுகொலையின் புறக்காரணிகளுக்கும் இந்தப் புத்தகத்தின் பேசுபொருளுக்கும் தொடர்புள்ளது. ஆம், இது இனவாதம் பற்றிய புத்தகம். இதன் பேசுபொருள் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. எதனை அவாவுகின்றது, எத்தகைய விளைவினை ஏற்படுத்தக்கூடியது என்பது தொடர்பான சில குறிப்புகளை இவ்வத்தியாயத்தியில் பதிவுசெய்ய விழைகிறேன்.

    24 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.