
Sign up to save your podcasts
Or


வவுனியா வடக்கில் நெடுங்கேணியின் தென்னெல்லையில் உள்ள பெரியமடு பிரதேசத்தின் நயினாமடு கிரமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கோடலிபறிச்சான் என்ற காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது. இவ்விடத்தை இங்குள்ள சிறிய நடைபாதையில் இருந்து அடர்ந்த காடுகள் ஊடாக நீண்ட நேரக் கால்நடைப் பயணத்தின் பின்னரே அடையமுடிந்தது. இவ்விடத்திற்கு மிக அருகில் பாழடைந்த சிறிய கேணியொன்று காணப்படுகின்றது. அக்கேணியைச் சுற்றி பொழிந்த வெள்ளைக் கருங்கற் தூண்கள் நாட்டப்பட்டுள்ளன. இவை இங்கிருக்கும் கேணியின் தொன்மையையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் புலப்படுத்துவதாக இருந்தது. இவ்விடத்தின் சுற்றாடலில் பாழடைந்த சில குளங்களும், சிறிய மண்மேடுகளும், அடர்ந்த காட்டுமரங்களுடன் சில புளிமரங்களும், இலுப்பை மரங்களும் காணப்படுகின்றன. அவற்றிடையே அரிதாக சில செங்கட்டிகளும், சிலவகை மட்பாண்ட ஓடுகளும் காணப்பட்டன.
மாடு ஆடு போன்ற கால்நடைகள் இயற்கையில் கிடைக்கும் புற்களை செரிமானம் செய்யத் தக்க உணவுக் கால்வாய் தொகுதியை கொண்டவை. குறிப்பாக அவற்றின் அசையூன் இரப்பையில் உள்ள நுண்ணுயிர்கள் [Rumen microbes] புற்களில் உள்ள நார்ச்சத்தையும் [fiber] ஏனைய உயிர்ச்சத்துகளையும் சமிபாடடையச் செய்வதன் மூலம் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கின்றன.
ஆரம்ப காலத்தில் மாடுகள் முற்று முழுதாக புற்களையும் மர இலைகளையும் செடிகளையும் நம்பியே வாழ்ந்தன. மனிதனின் பயன்பாட்டுக்கு கால்நடைகள் வந்த பின் மேலதிகமாக விவசாய மீதிகளையும் வீட்டு உணவுக் கழிவுகளையும் உட்கொண்டன. இன்று அவை அவற்றின் உற்பத்திக்கு அமைய விசேடமாக தயாரிக்கப்பட்ட கால்நடை செறிவு உணவையும் [concentrates] சேர்த்து உட்கொள்கின்றன. அதிக பாலுற்பத்திகளை தரத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள இன்றைய கால்நடைகள் அதற்கேற்ப தரமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகும். இலங்கையின் கால்நடைகளை பொறுத்தவரையில் நவீன உணவு முறைகள் மிகக்குறைவாகவும் பாரம்பரியமான முறைகள் அதிகளவிலும் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் வருடம் முழுவதும் தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதும் இல்லை. பாலுற்பத்தியில் தன்னிறைவு காண முடியாத நிலைக்கு கால்நடைகளுக்கு வழங்கப்படும் மேற்படி பொருத்தமற்ற உணவு முறைகளும் காரணமாகும்.
இலங்கை முஸ்லிம்கள் ஒரு பன்மையான இனக் கலப்பைக்கொண்ட முஸ்லிம் என்ற மத அடையாளத்தினூடே ஒரு புள்ளியில் இணைந்த இனம் என்பதையும், அவர்களை மரபினரீதியாக முழுமையாக அரபு வேரோடு தொடர்புறுத்த முடியாது என்பதையும் மரபணுவியல் ஆய்வுகளை முன்வைத்து முதலாம் அத்தியாயத்தில் விவாதித்திருந்தேன். தவிர, அவர்களின் இனத்துவ மூலமானது இந்திய-இலங்கைத் தன்மையுள்ள இனத்துவ மரபை, பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பதையும் எடுத்துக்காட்டி இருந்தேன். அந்தவகையில் பார்த்தால் இலங்கை முஸ்லிம்கள் மொழி, மரபணு, பண்பாடு சார்ந்து தமிழ் மூலத்துக்கு மிக நெருக்கமானவர்கள். ஆனாலும் சமகாலத்தில் முஸ்லிம்கள் அந்த அடையாளத்திலிருந்து தூரமாகிக்கொண்டிருக்கின்றனர். அது குறித்த ஒரு நோக்கையும் இந்த அத்தியாயத்தில் செலுத்த விரும்புகிறேன்.
ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்ற இரு நாடுகளையும் போன்றே கனடாவும், குடியேறிகள் பெரும்பான்மையினராக அமைந்த குடியேறிகள் சமூகம் (Settler Society ) ஆகும். குடியேறிகள் சமூகங்கள் உள்ள நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர் சுதேசிகளான பழங்குடியினரை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு துரத்தி விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளினர்.
1763ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசுப் பிரகடனத்தில் சுதேசிகளுக்கும் ஐரோப்பியர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை அடிப்படையில் பங்குடமைச் சமூகமாக கனடா விளங்கவேண்டும் என்று கூறப்பட்டதெனினும், சுதேசிகளின் கீழ்ப்பட்ட நிலை தொடரலாயிற்று. சுதேசிகளின் நிலங்களை ஐரோப்பியர் அபகரித்தல், இந்தியர்களுக்கான ஒதுக்கிடப்பகுதிகளை உருவாக்குதல், பழங்குடியினரின் பாதுகாப்பை வழங்கத் தவறிய உடன்படிக்கைகளைச் செய்தல் போன்ற வழிகளில் பழங்குடியினர் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பழங்குடிமக்கள் விவகாரம் சமஷ்டி அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தது. 1876 இல் இந்தியர் சட்டம் (Indian Act 1876) அமுல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் இந்தியர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக அவர்களது உரிமைகளைப் பறித்து காலனித்துவ ஆட்சி முறைக்குள் அவர்களைக் கொண்டு வந்தது. எந்த மக்களைப் பாதுகாக்கவென இந்தச் சட்டம் இயற்றப்பட்டதோ அந்த மக்களை ஒடுக்குவதற்கும் அது பயன்படுத்தப்பட்டது என்று கரோல்ட் கார்டினர் என்பவர் கூறியிருக்கிறார். கனடாவின் மக்கள் இன்று திருத்த வேண்டிய வரலாற்றுத் தவறுகளில் பழங்குடியினர் பிரச்சினை ஒன்றாக உள்ளது.
கனடாவில் அரசியல் யாப்புவாதம் (Constitutionalism) வளர்ச்சியடைவதற்கு பழங்குடிகள் மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அரசியல் யாப்பின் மூலமான தீர்வுகளில் தொடர்ச்சி (Continuity), பரஸ்பர அங்கீகாரம் (Mutual Recognition) சம்மதம் (Consent) அரசியல் இணக்கமும் மதிப்பும் ஆகிய கருத்துகள் பரவலாக்கப்படுவதற்கு இவர்களின் பங்களிப்பு உதவியது. நீண்டகாலமாக கனடாவில் இருந்து வந்த காலனித்துவச் சிந்தனையை தோலுரித்துக் காட்டுவதற்கு பழங்குடி மக்கள் தலைவர்களின் அரசியல் பங்களிப்பு உதவியது.
பழங்குடிகளின் இன்றைய அரசியல் இயக்கம் 1960 களில் ஆரம்பித்தது. கியுபெக்கின் முன்மாதிரியால் இது ஊக்கம் பெற்றது. சர்வதேச மட்டத்தில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியும், பழங்குடி மக்கள் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றமையும் பழங்குடியினரின் அரசியல் இயக்கத்திற்கு ஊக்கம் அளித்தன.
1969 ஆம் ஆண்டில் கனடா அரசாங்கம் வெள்ளையறிக்கையொன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை பழங்குடியினருக்கு எதிரான பாரபட்சம் காட்டுதலை ஒழித்தல் எப்படி என்ற திட்டத்தை முன்வைத்தது. இதன்படி பழங்குடிகள் கனடாவின் ஏனைய பிரஜைகளிற்குச் சமதையான அந்தஸ்தையும் வாழ்க்கையையும் பெறுவர் என்று கூறப்பட்டது. இது உண்மையில் உள்ளீர்த்தல் அல்லது ஒருங்கிணைப்பு சிந்தனையாகும்.
மரபுவழிப் பழங்குடிச் சமூகங்களிற்கு சுயாட்சியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நகர்ப் பகுதிகளில் குடியேறி வாழும் பழங்குடி மக்கள் மீதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் பிரச்சினைகளைத் தோற்றுவித்தன.
“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” எனும் பேசுபொருளின் முதல் தளமாக “திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு” பற்றிப் பேசி வருகிறோம். இதுவரை பேசப்பட்டு வரும் ‘வர்க்கங்கள் உருவாகிய போது ஏற்பட்ட அவசியம் காரணமாக அரசு தோற்றம் பெற்றது’ என்பதற்கு மாறுபட்ட விடயமாக இங்குள்ள பேசு பொருள் அமைந்துள்ளது. இவ்வகையிலான புதிய தொடக்கம் ஒன்றையும் அதன் தொடர்ச்சியாக மாற்று வடிவிலான இயக்கப் போக்கையும் தமிழ்ப் பண்பாடு வெளிப்படுத்த ஏற்றதான அடித்தளம் எவ்வகையில் அமைந்திருந்தது என்பது பற்றி இங்கு அலசுவோம்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதற்காக கல்விகற்ற இலங்கையர்கள் உரத்துக் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு முன்னர், ஆளுநரிடமும், படைத்தளபதிகளிடமும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன.
ஆரம்பத்தில் 1832 ஆம் ஆண்டில் கோல்புறூக் - கமரூன் அரசியல் நிர்வாக சீர்திருத்தத்திற்குப் பின் ஆளுநரின் தனி அதிகாரம் குறைக்கப்பட்டு, கூட்டுப்பொறுப்பு ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. பின் நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு பிரித்தானிய அரச அதிபர்களின் பரிபாலனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அரச நிறைவேற்று சபை மற்றும் 19 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சட்டசபை ஆகியன ஏற்படுத்தப்பட்டன.
முன்பு சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாக தோட்டத்துரைமார்கள் சமூகத்தை சேர்ந்த ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்ட போதும் பின்னர் படித்த ஆங்கிலேய மோகம் கொண்ட மேட்டுக்குடி வர்த்தகர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்விதம் நியமிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பறங்கியர் என்று இடம்பெற்றனர்.
இக்காலத்தில்தான் (1833) டொக்டர் கிறிஸ்தோபர் எலியட் (Dr.Christopher Elliott) அவர்களின் தலைமையில் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த ‘தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்' தேவை என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது. இவர் ஒரு எழுத்தாளராகவும், மருத்துவராகவும் இருந்ததுடன் "இலங்கையின் நண்பர்கள்" என்ற இயக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.
(1924) இலங்கையில் மொத்த இந்தியத் தமிழரின் சனத்தொகை ஒரு லட்சத்து 86 ஆயிரம் ஆகவும் தோட்டத் தொழிலாளர்களின் தொகை 6 லட்சமாகவும் இருந்த போதும், இவர்களில் வாக்காளர்களாக பதிவு செய்ய 12,901 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். கொழும்பில் வாழ்ந்த வர்த்தகர்களும், தோட்டத்துக் கங்காணிகளும், தோட்ட உத்தியோகத்தர்களும் வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொண்டனர். எந்தத் தோட்டத் தொழிலாளியும் வாக்களிக்க தகுதி பெறவில்லை. இதன் பிரகாரம் 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய வம்சாவழியினர் சார்பில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் ஐ. எக்ஸ். பெரேரா, முகமட் சுல்தான், கோ. நடேசய்யர், எஸ். பி. ஷண்ட்ஸ், ஐ. டேவிட், ஆர். ஈஸ்வரமூர்த்தி ஆகியோராவர். இவர்களிலிருந்து ஐ. எக்ஸ். பெரேரா முதலாவதாகவும், முகமட் சுல்தான் இரண்டாவதாகவும் சட்டசபைக்கு தெரிவாகினர்.
மருத்துவர் கிறீன், தமிழில் விஞ்ஞானம் அறிமுகமாகாத காலத்தில் ஆங்கில மருத்துவத்தைத் தமிழிற் கற்பித்தவர்; தமிழில் விஞ்ஞானந் தந்த தந்தை; மருத்துவத் தமிழ் முன்னோடி; தமிழ்க் கலைச்சொல்லாக்க முன்னோடி என்று தமிழறிஞர்களால் விதந்துரைக்கப்படுகிறார்.
கடலை - வயிறு ஊத வைக்கும், அஜீரணத்தை உண்டாக்கி குடலை வலித்து மலம் போக்கும். மருந்தை முறிக்கும். ஆதலால் மருந்துண்ணுங்காலத்தில் கடலை உண்ணலாகாது. மருந்துக்கு அபத்தியமாகும். சோர்வையுண்டாக்குவதுடன் வாயுவையும் அதிகரிக்கும்.
கொள்ளானது குடல் வாதத்தையும் (குடல் முறுக்கல்) குன்மத்தையும் (வயிற்றுப்புண்) உண்டாக்கும். உட்கொள்ளும் மருந்துகளை முறிக்கும். பித்தம் அதிகரிக்கும். எனவே கொள்ளினை உடல்மெலிவுக்கென நீண்டகாலம் உட்கொள்ளும்போது மேற்படி உபத்திரவங்கள் ஏற்படலாம்
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி, பஞ்சம், இயற்கை அழிவு, போர், நாடுகளுக்கு இடையிலான போட்டி இவை அனைத்தும் மனிதக் குடித்தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட விளைவுகளே. இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் COVID-19 வந்ததே மக்களை அழித்து உலகை சமநிலைப்படுத்தவேயாகும். நாம் எமது விஞ்ஞான முன்னேற்றத்தால் தடுப்பூசி போட்டு கொவிட்டைத் தடுத்துவிட்டோம் என நினைத்து யாரும் சந்தோசப்படக்கூடாது. இன்னும் பல பேரழிவுகள் பூமியை சமநிலைப்படுத்துவதற்காக காத்திருக்கின்றன.
ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) அலேர்ஜி ஆஸ்த்மா போன்ற நோய்களின் சிகிச்சையில் பெரிதும் பயன்படும் இம்மூலிகை, அருகிவரும் தாவர இனங்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆனைத்திப்பிலி - தோல்வியாதிகள் ஆஸ்த்மா வயிற்றோட்டம் நீரிழிவு என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரத்தின் இலைத்தூள், களை மூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்த முகரப்படுகிறது.
வலம்புரிக்காய் - வலம்புரிச் செடியின் வேர் நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படக்கூடும் என்னும் விபரம் சமீபத்தைய ஆய்வுகளின்மூலம் தெரியவந்துள்ளது.
வெட்பாலரிசி - இது சொறி எக்சிமா போன்ற தோல் வியாதிகளுக்கென பயன்படும். எண்ணெய்த்தயாரிப்புக்களில் வெட்பாலரிசி சேர்க்கப்படுகின்றது. பொடுகை நீக்கும் குணமும் இதற்கு இருப்பதால் கூந்தல் தைலங்களிலும் வெட்பாலை அரிசி சேர்க்கப்படுகின்றது.
சிறுதேக்கு - மூட்டுவாதம் செமியாக்குணம் வயிற்றுவலி நெஞ்செரிவு குடற்புழு மலேரியா ஆஸ்த்மா போன்ற பல்வேறு வியாதிகளுக்கான மருந்துத் தயாரிப்புக்களில் பாரங்கி எனப்படும் சிறுதேக்கின் வேர் சேர்க்கப்படுகின்றது.
போளம் - கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது ஆயுர்வேத மூலிகைக் கடைகளில் கிடைக்கும்.
From the publisher's feed