
Sign up to save your podcasts
Or


இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியில், அவர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை அண்டிய மாகாணங்களில் ஏற்பட்டிருந்ததனால் அவர்களின் கலையழிவுக் கொள்கையில் இருந்து மாகாணங்களின் உட்பகுதியில் இருந்த ஆலயங்கள் தப்பித்திருக்க இடமுண்டு. அவற்றில் ஒன்றாகவே திருமங்கலாய்ச் சிவன் ஆலயத்தைப் பார்க்கின்றேன்.
திருகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட திருமங்கலாய் என்ற வரலாற்றுப் பழமைவாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பற்றி திருகோணமலை தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது இவ்வாலயம் கிளிவெட்டியின் பிரதான வீதியில் இருந்து ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் மீன்சார வேலி போடப்பட்ட அடர்ந்த காட்டின் மத்தியில் காணப்படுகின்றது. இவ்விடத்திற்குச் செல்லும் பாதையில் பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் யானைகளின் நடமாட்டத்தை எதிர்கொள்வது சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. இவற்றின் காரணமாகவே இதுவரை தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் இவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதில் தயக்கம் காட்டி வந்துள்ளனர்
இவ்வாலயத்தின் பெரும்பகுதி முற்றாக அழிவடைந்து அதன் அழிபாடுகள் ஆங்காங்கே கற்குவியல்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் அவ்வாலயத்தின் கட்டிட அமைப்பையும். அதன் கலை மரபையும். ஆலயம் தோன்றி வளர்ந்த காலத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய நம்பகரமான ஆதாரங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. கருங்கற்களையும், செங்கட்டிகளையும் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தின் கர்பக்கிரகமும் அதன் மேலமைந்த விமானமும் முற்றாக அழிவடைந்து அதன் கட்டிடப் பாகங்கள் ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுகின்றன.
1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஜெர்மி பெந்தம் (Jeremy Bentham) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோரால் அப்போது முன்வைக்கப்பட்ட சீர்திருத்தவாத அரசியல் சித்தாந்தத்தின் தாக்கத்தால் ஒரு புதிய சிந்தனை அலை உருவாகியிருந்தது. இது பயன்பாட்டுவாதம் (utilitarianism) என்று அறியப்பட்டது.
வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 2 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்
உளுந்து, சிறுபயறு, பயறு, கடலை, காராமணி (கௌபி), துவரை, கொள்ளு, எள் என்பன பொதுவாக எமது பாரம்பரிய உணவுகளில் பாவிக்கப்படும் பருப்பு வகைகளாகும். இவற்றைவிட மொச்சை, பட்டாணி, பொட்டுக்கடலை போன்று வேறுவகை பருப்புவகைகளும் பாவனையில் இருந்துவருகின்றன.
வாய்விளங்கத்தின் மிக முக்கியமான மருத்துவப்பயன் ஒன்றை இரசவர்க்கம் குறிப்பிடத்தவறிவிட்டது. நாடாப்புழு (tapeworm) ,கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்களுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. உலகப்பிரசித்திபெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செற்’ (The Lancet) 1887 ஆம் ஆண்டிலேயே நாடாப்புழுவுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகப்பயன்படக்கூடியது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
கசக்கிப் பிழிந்து, அடக்கி ஆண்டு, வன்முறையின் பிடியில் வைத்திருந்து, தொழிலாளரிடமிருந்து உழைப்பை உச்ச அளவில் பெற்றுக் கொள்கின்ற பாங்கு பெருந்தோட்ட வரலாற்றின் முழுப்பக்கங்களிலும் ஒரு கறைபடிந்த காரணியாக இருந்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதற்கென பல்வேறு வழிமுறைகளை துரைமார்கள் தேர்ந்தெடுத்து கடைப்பிடித்துள்ளனர் என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன.
வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத் தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன
இங்கு மொத்தமாக 38 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள 38 கல்வெட்டுக்களில் 2 கல்வெட்டுக்கள் தமிழர் பற்றிக் கூறுகின்றன. இதில் தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் “தமெத வனிஜ கபதி விசகஹ லேன” என பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேராசிரியர் பரணவிதான “The cave of the householder Visakha, the Tamil Merchant” என மொழிபெயர்த்துள்ளார்.
இது தமிழ் வணிகனான குடும்பத் தலைவன் விசாகனின் குகை எனப் பொருள்படும். இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volume 1 எனும் நூலில் 356 ஆவது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் ஐரா கௌல்ட் 1850 இல் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மருத்துவமனை (FINS Hospital - தற்போதைய போதனா மருத்துவமனை) ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவமனையின் முதலாவது டிஸ்பென்சராகவும் முதலாவது வதிவிட சத்திரசிகிச்சை மருத்துவராகவும் கடமையைப் பொறுப்பேற்றார்.
மருத்துவர் கிறீன், மானிப்பாயில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றியவாறு யாழ். நகரத்தில் 1850 இல் தாபிக்கப்பட்ட ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையின் முதலாவது வருகை சத்திரசிகிச்சை நிபுணராகவும் பணியாற்றினார் (First Visiting Surgeon of the Jaffna Teaching Hospital). மானிப்பாயில் கிறீன் ஆரம்பித்த டிஸ்பென்சரி வெளிநோயாளர் மருத்துவமனையாகவே விளங்கியது.
பிரித்தானிய குடியேற்ற நாட்டுச் செயலாளர் சேர். எமர்சன் ரெனன்ற் 1848 இல் வட்டுக்கோட்டை செமினரியைப் பார்வையிட்டு கல்லூரியை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகக் குறிப்பிட்டிருந்தார். தென்னிந்தியச் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது பேராயராக விளங்கிய வண. சபாபதி குலேந்திரன், வட்டுக்கோட்டை செமினரி பெற்றிருந்த உயர்நிலையை இலங்கையின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் இன்று வரை பெற்றதில்லை என்று 1992 இல் அமரத்துவம் அடையும் முன்னர் கூறிய வாசகங்கள் இன்றும் சிந்தனைக்குரியன .
இந்த உலகில் வாழ்கின்ற மனித இனம் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரீகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. இதில் மூத்த இனமாக தமிழினம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதனால்தான் நாமக்கல் கவிஞர், தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு' என்று தமிழரை அடையாளப்படுத்தினார்.
கனடாவின் சமஷ்டியின் வரலாறு 'பிரிந்து வேறாதல்' 'ஒன்றாக இணைதல்' என்ற இருவேறு செயல்முறைகளும் சமாந்தரமாகச் செயற்பட்டதொன்றாகவே இருந்துள்ளது. சமஷ்டிச் சட்டம், 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
From the publisher's feed