
Sign up to save your podcasts
Or


இலங்கையில் வாழும் இந்திய தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேறுபட்ட பெயர்களால் அழைப்பது அவர்கள் தமது இனஅடையாளத்தை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக டேனியல் என்ற அறிஞர் கூறுகிறார்.
1946இல் இந்தநாட்டின் மொத்தசனத்தொகையில் இந்தியத்தமிழர் 11.7 வீதமாக இருந்தனர். ஆனால் 1981 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டில் அவர்களது சனத்தொகைப்பங்கு 5.5 வீதமென மதிப்பிடப்பட்டது. இவ்விரு சனத்தொகைக் கணிப்பீட்டு ஆண்டுகளுக்குமிடையே அவர்களது சனத்தொகைப்பங்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை இது காட்டுகின்றது.
மலையக இளைஞர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருமானம் ஈட்டிக்கொள்வதற்குத் தேவையான கடன்வசதிகளும், வேறு மூலதன சாதனங்களும், அவ்வித தொழில் நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்கான இடவசதிகளும் அவர்களிடம் இல்லாததால் சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. தலைமைவகிக்கும் பண்புகள், போட்டிமனப்பாங்கு என்பன அவர்களிடையே போதுமான அளவு இல்லாதிருப்பதும் இதற்குப்பங்களிக்கும் இன்னொரு காரணியாகும்.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry
நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டீரியல்ஸை இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேச மட்டத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என்டுதான் இதை தொடங்கியிருக்கிறம். ஆனால் அந்த அளவுக்கு நாங்கள் என்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் எண்ணிக்கை கூடினாத் தான் அதை செய்ய முடியும்.
உள்ளூர் மக்கள் இதை வாங்குவது குறைவு. அவர்கள் இதை ஆடம்பரப் பொருளாகத்தான் பாக்குறாங்க.
இப்ப நாட்டில இருக்குற பொருளாதாரப் பிரச்சினையால உற்பத்திக்குத் தேவையான “டை“ எல்லாம் விலை கூடிட்டு. போக்குவரத்து செலவு எல்லாம் அதிகம். ஆனால் முடிவுப் பொருளின் விலையை யாரும் அதிகரிக்கவில்லை. இது எங்களுடைய பொருளாதாரத்தில் சரியான தாக்கம்
குயர் மக்கள் என்போர் யார்? அவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? என்றவாறாக ஏராளமான வினாக்கள் எம்மத்தியில் காணப்படுகின்றன.
பால், பால்நிலை, பாலீர்ப்பு போன்ற விடயங்களின் அடிப்படையில் மனிதர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குயர் சமூகத்தினுள் தன்பாலீர்ப்பாளர்கள், திருநர்கள், இருபாலீர்ப்பு உள்ளவர்கள், பாலீர்ப்பு அற்றவர்கள் எனப் பல்வேறுவிதமான மக்கள் வாழ்கின்றனர். குயர் சமூகங்களின் அரசியலும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களும் ஒடுக்குமுறைகளும் ஏராளமானவை.
நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விதிமுறைகள், கொள்கைகள் என்பவற்றைத் தனிமனிதன் மீது சுமத்துவதான வாழ்வியலை சமூகம் கட்டமைத்திருக்கிறது. குயர் மக்களும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் தயாராக இல்லை. இலங்கையின் மதம் சார்ந்த சமூகக் கட்டமைப்பு குயர் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுவிதமான வன்முறைகளுக்கு அடிப்படையாக அமைகின்றது.
இலங்கையின் வடபுலத்திலும் கூட குயர் மக்கள் குறித்த சமூகத்தின் பார்வையானது மதம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் இருக்கிறது.
#lgbtq #lgbt #gay #pride #queer #lesbian #love #gaypride #bisexual #transgender #trans #gayboy #lgbtqia #lgbtpride #pridemonth #lgbtcommunity #jaffnapride #pridemonth2022 #lgbtqia+ #jaffna #transgenderrights #TamilLGBTQ
தமெத”எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்களும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில், மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டுக்களும் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும்.
அனுராதபுரம் புராதன நகரில் உள்ள அபயகிரி விகாரைப் பகுதியில் தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய ஒரு பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. அபயகிரி தூபியின் மேற்குப் பக்கத்தில் சுமார் 300 மீற்றர் தூரத்தில் சில கற்பாறைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
பொ. ஆ. மு. 1ஆம், 2ஆம் நூற்றாண்டுகளில் அனுராதபுர நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் வணிகர் குழுவொன்று இந்நகரத்தில் ஒரு முக்கிய கட்டிடமொன்றை அமைத்திருந்தது. வணிகக் குழுவினரின் அங்கத்தவர்கள் கூடி வர்த்தகம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து, கலந்துபேசி தீர்மானங்கள் எடுக்கும் ஒரு வர்த்தக அலுவலகமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
#பிராமிகல்வெட்டுகள் #தமிழ்ப்பிராமி #தமிழி #TamilBrahmi #Brahmiscript #OldTamil #Dravidianphonotactics #TamilBrahmi #Vatteluttu #tamilscripts
அரபு நாட்டவர்களால் அருமருந்தாக எண்ணப்படுவது கருஞ்சீரகம். சாவு ஒன்றைத்தவிர மீதி எல்லா நோய்களையும் தீர்த்துவைக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு என முகம்மது நபி அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும் உள்ளது. ஏராளமான இரசாயனப்பொருட்கள் கருஞ்சீரகத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சதகுப்பை மூலக்கடுப்பு, தலைவலி, காய்ச்சல் என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். வயிற்றோட்டம், வாய்வு, செமியாக்குணம், வயிற்றுவலி, சுரம் போன்ற சாதாரண சுகவீனங்களுக்கு சதகுப்பை வீட்டுமருந்தாகப் பயன்படுகிறது. சதகுப்பையின் இலைகள், கனிகள் இரண்டுமே மருந்தாகப் பயன்படுகின்றன.
நெஞ்சில் சளிக்கட்டு, சுவாசிப்பதில் கஷ்டம் போன்ற சுவாசத்தொகுதி சம்பந்தமான நோய்களுக்கு அரத்தை மருந்தாகப் பயன்படுகின்றது. அரத்தையில் சித்தரத்தை, பேரரத்தை என்னும் இரு இனங்கள் உள்ளன. இரண்டும் மருந்தாகப் பயன்படுகின்றன.
#சித்தமருத்துவம் #சித்தர்கள் #இரசவர்க்கம் #பெருங்காயம் #Asafoetida #Ginger #இஞ்சி #உள்ளி #Garlic #இலவங்கப்பட்டை #cinnamon #சாதிக்காய் #nutmeg
மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சையால் பண்டிதர் முத்துத்தம்பி உயிர்பெற்றமை அன்று யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற சுதேச மருத்துவராக விளங்கிய இளையதம்பி அவர்களது மைந்தன் வைத்திலிங்கம் அவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தையும் சத்திரசிகிச்சை முறையையும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
வட்டுக்கோட்டையில் மருத்துவப் பணியை ஆரம்பித்த மருத்துவர் கிறீன் அமெரிக்க மிசனரிகளது வேண்டுகோளை ஏற்று மானிப்பாய்க்குச் சென்று அங்கு தனது மருத்துவப் பணியைத் தொடர்கின்றார்.
யாழ்ப்பாணத்திலே மருத்துவ மற்றும் சத்திரசிச்சைக் கற்கைநெறியை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் கிறீன் மிகவும் ஆர்வமுடன் இருந்தார்.
கிறீன், யாழ்ப்பாணத்தில் 10,000 பேருக்கு ஒரு மருத்துவரையாவது நியமிப்பது அவசியம் என்று கருதினார். 1848 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த சனத்தொகை 3 இலட்சம். எனவே 30 மருத்துவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அன்றைய காலப்பகுதியில் அமெரிக்காவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்ட 3 வருட பாடத்திட்டத்தையே கிறீன் இங்கு மானிப்பாயில் 1848 இல் நிறுவிய இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியிலும் நடைமுறைப் படுத்தினார்.
1950 கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் முக்கியத்துவம் மிக்க ஆண்டுகளாகும். 1948 இல் தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியை ஆரம்பித்திருந்தாலும் 1950 களில் இருந்தே அவருடைய பிரசாரத்தினை தீவிரமாக முன்னெடுத்தார். இதேபோன்று 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உருவாக்கினார்.
இவ்வாறு இரு இனங்களின் இரு கட்சிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டதனால் தமிழ் காங்கிரஸ் எதிர் தமிழரசுக் கட்சி என்றும், ஐக்கிய தேசியக் கட்சி எதிர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றும் தங்களுக்கிடையிலான ஒரு போட்டி அரசியல் உருவாக்கப்பட்டது. இந்தப் போட்டி அரசியல் யார் அந்தந்த இன மக்களை வெற்றிகொண்டு தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறுகிறார்கள் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
இதன் காரணமாக மக்களை அதிகம் உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய இனம், மதம், நாடு, மொழி, தேசியம் போன்ற அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. நான்கு கட்சிகளுமே இவற்றைப் பாதுகாத்துப் பேணுவதாகக் கூறினாலும் யாரை நம்புவது என்பதே பிரச்சினையாக இருந்தது. இந்த நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்காக போட்டிபோட்டுக் கொண்டு இனவாத செயற்திட்டங்களை முன்மொழிந்து மக்களுடைய இனவாத உணர்வைக் கூர்மைப்படுத்தினர்.
#buddhism #srilankawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils #DonoughmoreConstitution #constitutionlk #SrilankanTamils #srilankanflag #ggponnambalam #sjvselvanayakam #dssenanayaka
தமிழ் சிங்கள மக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் மொழிகளின் வேறுபாட்டால் தோன்றியதெனக் கூறும் அறிஞர்களில் சிலர் இனத்தால் அவர்களின் மூதாதையினர் இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர்.
ஆயினும் அம்மக்களின் பண்பாட்டுடன் சிங்கள மக்களுக்குள்ள தொடர்புகளும், நினைவுகளும் பௌத்த மதத்தின் வருகையோடு தோன்றிய புதிய பண்பாட்டால் மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டன என்றே கூறலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அப்பண்பாட்டு அம்சங்கள் சிறப்பாகப் பெருங்கற்காலப் பண்பாட்டின் மரபுகள் சில தற்காலம்வரை தொடர்ந்து நிலைத்திருப்பதைக் காணமுடிகின்றன.
பெருங்கற்கால மக்கள் பிராமி எழுத்தைப் பயன்படுத்த முன்னர் தொடர்பு மொழியாக குறியீடுகளை தமது மட்பாண்டங்களில் பொறித்துள்ளனர். கட்டுக்கரைப் பெருங்கற்கால மக்கள் மட்பாண்டங்களில் மட்டுமன்றி எருதின் சுடுமண் உருவங்களின் வயிற்றுப் பகுதியிலும் இவற்றைப் பொறித்துள்ளனர்.
அவற்றுள் சூலம், வேல் முதலான குறியீடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வடிவிலான குறியீடுகள் பிற்காலத்தில் தமிழர்கள் வெளியிட்ட நாணயங்களிலும், கல்வெட்டுக்களிலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
கோ. நடேசய்யரின் அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரேயே நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மிக உரத்துக் குரல் கொடுத்தவர் சேர். பொன். அருணாசலம் (1853 - 1924) என்றால் அது மிகையாகாது.
இவரது கருத்துக்கள் மிக ஆணித்தரமாகவும் உச்சந்தலையில் சம்மட்டி கொண்டு ஓங்கி அடிப்பது போலவும் காணப்பட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துக்கள், பிரித்தானிய பாராளுமன்ற அங்கத்தினர்களுடன் அவர் கொண்டிருந்த உறவு மற்றும் ஏனைய உலகளாவிய தொழிலாளர் அமைப்புக்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தங்கள் என்பனவாகும்.
சேர். பொன். அருணாசலம் ஒரு செயல்திறன் மிக்க சிவில் சேவை அதிகாரியாக இருந்து 1913ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபின் தீவிரமான கிளர்ச்சிக் கருத்துள்ள அரசியல் செயற்பாட்டாளராக இயங்கத் தொடங்கினார்.
அவர் தான் அழைக்கப்பட்டு கலந்துக்கொண்ட கூட்டங்களில் எல்லாம் தொழிலாளர்கள் மீதான முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை பற்றியும் அவ்விதம் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட குற்றவியல் அம்சங்கள் கொண்ட சட்டங்கள் பற்றியும் காரசாரமாக சாடினார்
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry #ceylontea
வரகு, கம்பு, சோளம், சாமை, குரக்கன், தினை போன்ற சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
சிறுதானியங்கள் பெரும்பாலும் வறட்சியிலும் விளையக்கூடிய பயிர்களாகும். ஏனைய தானியங்களுடன் ஒப்பிடும்போது
சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். B வகை உயிர்ச்சத்துகளையும், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நாகச்சத்து போன்ற கனிமங்களையும் கொண்டுள்ளன.
சிறுதானியங்கள் நார்ச்சத்தானது மேலதிகமாக உடலில் உணவு தங்குவதைத் தடுக்கின்றது.இதனால் மல வெளியேற்றத்தைத் தூண்டுகின்றது. இதனால் மேலதிகமாக உடலில் கொழுப்புச் சேர்தல், கொலஸ்திரோல் உருவாக்கத்தை தடுக்கின்றது. இதய நோய்கள், அதிஉடற்பருமன், குடற்புற்றுநோய்கள் என்பவற்றை தடுக்கின்றது.
சிறுதானியங்கள் சமிபாடு அடையக்கூடிய, சமிபாடு அடையமுடியாத நார்ச்சத்துக்களைக் கொண்டது. இதனால் உடலில் உள்ள நன்நுண்ணுயிரிகள் (Probiotics) பெருக்கத்துக்கு உதவுவதால் சமிபாட்டையும் இலகுவாக்குகின்றது. இவ்வாறான நார்ச்சத்துக்கள் நன்நுண்ணுயிர்ப்போசிகள் (Prebiotics) என்று அழைக்கப்படுகின்றன.
எமது உணவுப்பழக்கமானது பருவகாலமாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதேபோல் சில நோய்நிலைகளில் பத்தியமாகவும் (உண்ணக்கூடியது) அபத்தியமாகவும் (உண்ணக்கூடாதது) கொள்ளப்படும். இச்சிறுதானிய உணவுகள் சில பருவகாலங்களில், சில நோய்நிலைகளில் உள்ளெடுக்கவும் சிலவற்றில் தவிர்க்கவும் வேண்டும்.
#Grains #Wheat #Pearl #Millet #கம்பு #சோளம் #Sorghum #Corn #வாற்கோதுமை #வரகு #ProsoMillet #தினை #Foxtailmillet
From the publisher's feed