
Sign up to save your podcasts
Or


இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
பண்பாட்டு மரபுரிமையின் மிக முக்கியமான பகுதியாக நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நினைவுச் சின்னம் (monuments) என்பது ‘உலகளாவிய ரீதியில் பெறுமதிமிக்கதும் வரலாறு, அழகியல், இனவியல் அல்லது மானுடவியல் ரீதியாக முதன்மை வாய்ந்ததுமான கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், அகழ்வாய்வு எச்சங்கள், குகை வாழிடங்கள், சாசனங்கள் முதலியவற்றைக் குறிப்பதாகும்’ என யுனெஸ்கோவின் (UNESCO) 1972 இற்குரிய விதிக்கோவை வரையறை செய்கிறது. 1992இல் ‘பண்பாட்டு நிலவுரு’ என்பதும் இதன் அங்கமாக்கப்படுகிறது.
அதன்படி இயற்கைமீது வினைபுரிதலூடாக மாற்றியமைக்கப்பட்ட நிலவுரு அமைவுகள் கவனத்தில் எடுக்கப்பட்டன. சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் புலங்களுக்கான சபை (ICOMOS) சர்வதேச நினைவுச் சின்னங்களுக்கான நிதியம் (WMF), நினைவுச் சின்னங்களுக்கான சர்வதேச நிதியம் (IFM) உள்ளிட்ட சர்வதேச ரீதியாகச் செயற்படும் அமைப்புக்கள் உட்பட தேசிய ரீதியாக இதேவிடயத்தைக் கவனத்தில் எடுத்துள்ள பல நிறுவனங்களும் தொழிற்பட்டு வருகின்றன.
இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
இக்கட்டுரைத் தொடர் வரலாற்றுத் தடயமாகவும், இனத்துவ அடையாளமாகவும் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே – குறிப்பாக தமிழ் மக்களிடையே – மரபுரிமைகளைப் பாதுகாத்தலின் பல பரிமாணங்களை எடுத்துரைத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழரின் மரபுரிமை அம்சங்களை வெளிக்கொணர்வதாகவும், அதேநேரத்தில் அழிந்து கொண்டிருக்கும் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் அதன் சமகால தேவைகளை எடுத்துரைப்பதாகவும் அமைகின்றது.
சுதேச மரங்கள் மனித வாழ்வியலோடு ஒன்றிப்போனவை. மனித நாகரிகத்தின் சாட்சியாக நிற்பவை என்றெல்லாம் நாம் பார்த்தோம். அவை எதற்கெல்லாம் பயன்படுகின்றன என நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? நாம் அறிந்த பயன்களுக்கப்பால் நாம் அறியாத பயன்களையும் இம்மரங்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது மரங்களை எப்படியெல்லாம் எமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை தான் எமக்குள் எழும்.
ஆயினும் அவற்றையும் தாண்டி இம்மரங்கள் ஆற்றும் தொழிற்பாடுகள் காரணமாகத் தான் இப்புவியிலே உயிர்கள் நிலைத்திருக்கின்றன என்றால் எவராலும் மறுக்க முடியாது. இத்தொழிற்பாடுகள் ‘சூழல் தொகுதிச் சேவைகள்’ என அழைக்கப்படுகின்றன.
இலங்கையிலேயே அதிகளவு இயற்கைக்காடுகளைக் கொண்ட பிராந்தியங்களுள் வடமாகாணமும் ஒன்று. வடமாகாணத்திலே வன்னிப்பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பு இயற்கையான காடுகளைக் கொண்டிருக்கிறது.
பல தசாப்தங்கள் நிலைத்து ஓய்ந்து போன யுத்தத்தைக் கூட சளைக்காமல் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்ற வானுயர்ந்த சோலைகள் இன்று என்றுமில்லாதவாறு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றன. பெருகி வரும் சனத்தொகையும் காணிகளுக்கான தேவையும் மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் இலகுவாய் வருமானம் பெறும் நோக்கங்களும் எனப் பலதும் பத்துமாய் மனித மையக் காரணிகள் முன்னே வந்து நிற்கையில் எங்கள் காடுகளுக்கான முன்னுரிமை குறைந்து தான் விடுகிறது.
இலங்கைக்குள்ளே பிரதேசத்துக்குப் பிரதேசம் வளங்கள் வேறுபட்டாலும் கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் எம் முன்னோர் மிக உறுதியாக இருந்தனர். அதன் மூலம் தம் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முயன்றனர் என்பது கண்கூடு. அன்று அவர்கள் வேறு எதனைப்பற்றியும் யோசிக்கவில்லை.
ஏனெனில் அன்றைய சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தேவையான வளங்கள் இலங்கையில் மிகையாகவே காணப்பட்டன. ஆதலால், நிறைந்து காணப்பட்ட அவ்வளங்கள் அருகி வருவதைக்கூட அவர்கள் உணரவில்லை.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதியில் இந்துப் பெருங்கடற் பகுதியில் முஸ்லிம்களான அராபிய வணிகர்களின் செல்வாக்கு இருந்துள்ளது. இக்காலப் பகுதியில் தென்னிந்தியக் கரையோரங்களை அண்டி இவ்வணிகர்களின் குடியிருப்புக்களும், வணிக நிலைகளும் உருவாகின. அக்காலத்தில் யாழ்ப்பாணத்துத் துறைமுகங்களுடனும் அவர்களுக்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கும் என ஊகிக்கலாம். காலப்போக்கில் யாழ்ப்பாணத்திலும் துறைமுகங்களை அண்டி அவர்களுடைய குடியிருப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் இருப்புக் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் யாழ்ப்பாணத்துடன் போர்த்துக்கேயரின் தொடர்புகள் ஏற்பட்ட காலப் பகுதியிலிருந்து, அவர்கள் எழுதிய நூல்களில் இங்கே முஸ்லிம்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையும் தமதாக்கிய ஒல்லாந்தர் அவற்றைத் தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத் தேவாலயங்களாக மாற்றினர். 138 ஆண்டுகால ஒல்லாந்தர் ஆட்சியில் இறுதி இரண்டு பத்தாண்டுகளைத் தவிர எஞ்சிய காலப்பகுதி முழுவதும் கத்தோலிக்க மதத்தின் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவின. எனினும், கணிசமான அளவு கத்தோலிக்க மக்கள் பற்றுறுதியோடு தமது மதத்தைப் பின்பற்றிவந்தனர். அவர்கள் தனியார் வளவுகளிலும், வீடுகளிலும் கூடி மறைவாக வழிபாடுகளில் ஈடுபட்டுவந்துள்ளனர். அக்காலத்தில் கோவாவிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருமார்களும் இரகசியமான முறையில் கத்தோலிக்க மக்களிடையே பணியாற்றியதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.
போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன. தமது மதமான கத்தோலிக்கம் தவிர்ந்த ஏனைய மதங்களைப் போர்த்துக்கேயர் ஒடுக்கினர். பல இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உருவாகின. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க மதத்தையும் தடை செய்து, தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்கு முயன்றனர். இலங்கையிலிருந்த ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி அரசாங்கம் சீர்திருத்தக் கிறித்த மதத்துக்கான தனியுரிமையைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்த போதும் அதன் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததாகத் தெரியவில்லை.
From the publisher's feed