எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • வீழ்ச்சியின் திசையில் பாரம்பரிய தமிழ் செதுக்குப் பாரம்பரியம் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    மரம், கல், உலோக வார்ப்பு வேலைகளை உள்ளடக்கிய பாரம்பரியத் தமிழ் செதுக்குப் பாரம்பரியம் பல நூற்றாண்டு கால வரலாற்றை உடையவொன்றாக இலங்கை உள்ளிட்ட தென்னிந்திய பண்பாட்டு வட்டகையின் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் வழங்கி வருகிறது. பொதுவாக விஸ்வகர்ம குலத்தினர் எனச் சிற்ப சாஸ்திர நூல்களால் இனங்காணப்படுகின்ற சமூகக் குழுவினர் இச் செதுக்குத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரில் பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்ற இவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு பட்டறைகளை அல்லது வெளிப்பாட்டுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக காணப்பட்டனர். ஒரு காலகட்டத்தில் இப் பட்டடைகளுக்கிடையே வெளிப்பாடு சார்ந்த திறமைப் போட்டிகளும் இப் பட்டடைகள் சார்ந்த சிறப்புத்தேர்ச்சிகளும் காணப்பட்டன. அச் சிறப்புத் தகுதிகளால் பெரியளவில் அவை அறியப்பட்டும் இருந்தன. இப் பட்டடைகள் உருவாக்கிய கோயில் வாகனங்கள், தேர்கள், கூடுகள், மஞ்சங்கள், விக்கிரங்கள் மற்றுமுள்ள செதுக்குகள் வழியாக ஒரு வலுவான தமிழ்க்காட்சிப் பண்பாட்டை அவை உற்பத்தி செய்தன. அதுமட்டுமின்றி அவை கல்லினதும், மரத்தினதும், உலோகத்தினதும் பௌதீக இயல்புகளைக் கடந்து அவற்றை ஊடறுத்து வாழும் உயிர்களுக்கு நிகரான படைப்புக்களை உருவாக்கின.

    9 min
  • மறைந்திருக்கும் சக்தி | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

    'யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்' என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.


    இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

    25 min
  • வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன்

    கரையோர வேடர்கள் எனப்படுவோர் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இலங்கை வேடர்களினதும், இலங்கைத் தமிழர்களினதும் வழித்தோன்றல்களாகக் காணப்படுகின்றனர்.

    களுவன்கேணிக் கிராமம் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கிராமமாகும். இக்கிராமத்தின் ஆதிக்குடிகள் வேடுவர்கள் தான் என்பதில் எதுவித ஐயமும் இல்லாத போதும், இவர்கள் எக்காலப்பகுதியில் இருந்து இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிய முடியவில்லை.

    வேடர்களின் வழிபாட்டு முறைகளில் உத்தியாக்களின் வழிபாடு என்பது மிகத் தோழமையுடனும், உறவுமுறையுடனும் ஆற்றுகை செய்யப்படுகின்றதோர் வழிபாடு ஆகும்.

    24 min
  • அச்சுறுத்தலுக்குள் ஈழத் தமிழ் அச்சுடல் : அச்சு ஊடக மரபுரிமைகளும் ஆவணக் காப்பும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    நவீன காலத்தில் அச்சு முதலாளித்துவம் பெருக்கெடுத்த பெரும் பண்பாட்டுக் களங்களில் ஈழத்தமிழ் பண்பாடும் ஒன்றாகும். காலனியம் உருவாக்கிய சமூக, பண்பாட்டு தொழில்நுட்ப நிலவரங்களின் விளைவாக அது காணப்பட்டது. உலகின் முதலாவது அச்சிடப்பட்ட நூல் வெளிவந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே (1465) தமிழின் முதலச்சுப் புத்தகம் ‘தம்பிரான் வணக்கம்’ (1554) இல் கேரளத்திலிருந்து வெளியாகியது. இவற்றைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அச்சிடப்பட்ட நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் எனப் பல்வேறு வடிவங்களிற் தொடர்ச்சியாக, தீவின் பல பாகங்களிலிருந்தும் அச்சிடப்பட்ட பனுவல்கள் வெளிவந்தன. காலனியம் உருவாக்கிய பண்பாட்டு மோதற் களத்தின் பிரதான தளகர்த்தர்களாக இந்த அச்சுடல்களே காணப்பட்டன.

    9 min
  • சங்கடப் படலை – அருகிச் செல்லும் பாரம்பரியம் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத்தில் வீடென்பதன் பரந்த பொருள் கொள்ளலாகும். இந்த எல்லையானது பாரம்பரியமாகப் பனையோலை அல்லது கிடுகு வேலி கொண்டமைக்கப்படும் – சற்றுப் பிற்பட்ட காலத்தில் சுண்ணாம்பு அல்லது சீமெந்தால் ஆன மதில்களும் எல்லைப்படுத்தலின் பொருட்டாக அமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு முதலான ஊர்களில் பாரம்பரியமான கல்வேலி எனும் அமைப்புமுறை வழக்கிலுள்ளது. இந்த சுற்றெல்லையுடைய வீட்டமைப்பின் பிரதான நுழைவாயில் சங்கடப்படலை என அழைக்கப்படும் ஒருவகையான படலை அமைப்புடன் காணப்பட்டது.

    சங்கடப்படலை என்ற சொல்லின் அடிப்படை அவ்வளவு தெளிவாக இல்லை. படல் என்பது பொதுவாக மூங்கிலால் வரிசையாகக் கட்டப்பட்ட வழித் தடுப்பைக் குறித்துள்ளது. அதிலிருந்து தான் படலை என்பது மருவியுள்ளது என நம்பப்படுகிறது. ஆனால் இதன் முன்னொட்டாகவுள்ள சங்கடம் இவ்விடத்தில் பெறும் பொருள் நிலை தெளிவில்லை. வழிப்போக்கர்களின் பயணச் சங்கடத்தை போக்கும் வாயிலமைவு எனச் சங்கடப்படலைக்குச் சிலவேளைகளில் தரப்படும் சொற்பொருள் விளக்கம் வெறும் சொல்லுக்குப் பொருளாக உருவாகியதா? என்பது தெளிவாகவில்லை.

    9 min
  • பாடசாலைகளின் கட்டட மரபுரிமைகள்: பழைய மாணவர் சங்கங்களும் அபிவிருத்தி நிதிகளும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    இன்றைய சமூக அசைவியக்கப் பின்புலத்தில் தோன்றியுள்ள படிப்பு – பாடசாலை முதலியன தொடர்பாகத் தோன்றியுள்ள புதிய நிலைப்பாடுகள் பல பாடசாலைகளை அளவுக்கதிகமான மாணவர் தொகையால் வீங்க வைத்திருக்கிறது – அவை திரட்டும் தனிப்பட்ட நிதிகள், அரச நிதிகள் உலக வங்கி உட்பட NGOக்களின் சிறப்பு நிதிகள் எனப் பல நிதி மூலங்களூடாகப் பாடசாலைகள் பலவற்றினதும் நிதி முதல்கள் அதிகரித்துள்ளன (ஆனால் அவை பங்கிடப்படும் முறை உட்பட்ட விடயங்கள் பற்றி இக் கட்டுரை எதனையும் பேச முனையவில்லை). இவ்விதமான நிதிகள் ‘அதனை – இதனை செய்யாவிட்டால் பணம் திரும்பி விடும்’, ‘அவங்கள் தாறாங்கள் ஏன் விடுவான்’ என்ற முதலான எண்ணங்களுடன் பெறப்படும் இந்நிதிகளூடாகக் கட்டடம் ஒன்றைக் கட்டலாம் எனும் சந்தர்ப்பம் கிட்டும்போது எந்தக்காரணம் கொண்டும் எம்மிடமுள்ள சமூக பண்பாட்டுத் தகைமையுடைய மரபுரிமைக் கட்டடத்தில் கை வைப்பதில்லை என்பது எமது தீர்க்கமான முதலும் கடைசியுமான முடிவாக இருக்கவேண்டும். ஆனால், நாமோ முதலில் அதிற்தான் கைவைக்கிறோம்.

    அது மட்டுமின்றி மேற்படி ஒரு புதிய கட்டுமானமொன்று உருவாக்கப்படுகையில் அது ஏற்கனவே எங்களிடம் இருக்கின்ற மூத்த மரபுரிமைக் கட்டடத்தின் தொடர்ச்சியாக, அதன் பண்புகளை பகிர்ந்தொரு பொதுமைப்பாட்டைக் கொண்டு இருக்கவேண்டும் என்பதும் அதில் முக்கியமானது. இல்லாவிட்டால் அது ஒரு பிச்சைக்காரனின் வாந்தி போல ஒன்றுடன் ஒன்று சம்மந்தமற்று ஒரு சுய அடையாளம் அற்றவொன்றாகிவிடும். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி எடுத்த கரிசனம் நல்லவொரு முன்னுதாரணமாகும். அவர்கள் தம் மூத்த கட்டுமானப் பண்புகளை தமது புதிய கட்டங்களிலும் நீட்டிக்க வைத்தல் காரணமாக கல்லூரிக்கு ஒரு கட்டுமான அடையாளத்தை (architectural identity) கொடுக்க முயற்சிக்கின்றார்கள்.

    11 min
  • பெண்களும் மரபுரிமைகளும்: எழுதப்படாத பக்கங்கள் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    பால்நிலை அசமந்தம், ஆண்முதன்மை ஆகிய சமூக பண்பாட்டு நிலவரங்கள் பலவேளைகளில் சமூக இயக்கத்தில் பெண்களது செயற்பாடுகள், பங்களிப்புக்கள், தனித்துவங்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இதனால், பெண்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களது தனியடையாளங்கள், வரலாற்று வகிபாகங்கள் என்பன சமூக பண்பாட்டு வரலாறுகளில் தொடர்ச்சியாக விடுபட்ட – எழுதப்படாத பக்கங்களாகவே உள்ளன.

    இந்த நிலைமையானது மரபுரிமைகள் பற்றிய எழுத்துக்களில் மேலோங்கியுள்ள மேட்டுக்குடிமைத் (elitism)  தன்மையை  ஒத்த இன்னொரு பிரச்சினைக்குரிய அம்சமாகும். அவ்வகையில் பால்நிலைப்பட்ட அசமந்தமானது மரபுரிமை எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகளுள்  மறைந்து காணப்படுகிற  விவாதத்திற்குரிய மற்றொரு விடயமாகும். இந்தவகையில் பெண்கள் உட்பட்ட சிறுபான்மையினரை வரலாற்றிற் கண்டுகொள்ளாமல் விடுதல் என்பது சாதாரணமான ஒன்றாக நியமநிலைப்பட்ட (normalization), இயல்பானதொரு போக்காக சமூக பண்பாட்டுக் களத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இது பண்பாட்டியக்கத்தின் கண்ணுக்கு புலப்படாத மேலாதிக்கம் அல்லது பண்பாட்டு அரசியலின் விளைவுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

    10 min
  • காலம் என்பது கறங்கு போல! | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன்

    அன்று எங்கள் பொருளாதாரத்தில், அதுவும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில் பண்டமாற்றம் பெரும் பங்கு வகித்தது. இந்தப் பண்டமாற்றின் அச்சாணியாகத் திகழ்ந்தவை பெரும்பாலும் மரங்களேயன்றி வேறல்ல.

    தொடர் இடப்பெயர்வுகள், கிராமங்களிலே தன்னிறைவோடு வாழ்ந்த எம்மில் பலரை நகரங்களை நோக்கி இடம்பெயர வைத்துவிட்டன. காணிகளில் இருந்த பயன் தரு மரங்கள் பல டெங்கு பாதுகாப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டன.

    விவசாய உற்பத்தி முறைமைகளின் நிலைபேறான தன்மையை உறுதி செய்வதும் கூட இந்த மரங்களே!


    #ezhuna #SriLanka #வடக்கின்_விருட்சங்கள்

    8 min
  • தவக்காலச் சிந்தனைகள்: உடக்கு பாஸ்க்கும் பஸாமும் உயிர்த்த ஆண்டவர் நிகழ்வும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    தமிழ் கிறிஸ்தவத்திற்கு ஒரு ஈழ மரபுண்டு. அது ரோமின் திருச்சபை ஆளுகைக்குட்பட்டதாயினும், தமிழ் கிறிஸ்தவத்தின் உலகளாவிய தன்மைகளைப் பகிர்ந்து கொண்டதாயினும், அதன் அமைவிடம் – சமூக பண்பாட்டு வரலாறு – அதன் வரலாற்று உருவாக்கத்தில் மேலாதிக்கஞ் செலுத்திய காரணிகள் – அதன் உள்ளூர் பண்பாட்டுக் களங்கள் மற்றும் அவற்றின் மோதல்கள் என்பனவற்றினால் அதன் சிறப்புப் பண்புகள் உருவாகின எனச் சுருக்கமாகக் கூறலாம். அதற்கு அதற்கான தனிமுகம் உண்டு. ஆனால், அந்தத் தனியடையாளச் சிறப்பினை இனங்காணவும், அதனைப் பாதுகாக்கவும் எம்மிடையே முயற்சிகள் இன்றுவரை இல்லை என்பதுதான் எமது துரதிர்ஷ்டம். பெரும்பாலான மரபுரிமைகள் – பண்பாட்டுத் தனியடையாளங்கள் தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் அவற்றைப் பற்றி எழுதி பட்டங்கள் வாங்கி அவற்றைப் பறக்கவிட்டுக் குதூகலிப்பதோடு சரி. அறிவையும் – புலமை மரபினையும் மக்கள் மயப்படுத்தாத கல்வியும் – கல்வியாளர்கள் என்போரும் வேறென்ன செய்ய முடியும்? அவரெவரும் அதனை செயற்பாட்டுநிலையில் பாதுகாக்க எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடத் தயாராயில்லை. வெற்றுச் சடங்காசாரத் தேசியத்தின் துதிகளை மேடைக்கும் – தேர்தல் ஓட்டுக்கும் பாவிக்கும் அறிவியல் மற்றும் அரசியல் களத்தில் வேறெதையும் நாம் எதிர்பார்த்தல் என்பது எமது முட்டாள்தனமாகவே இருக்கும்.

    9 min
  • கீரிமலை பாசுபத – கபாலிகச் சைவ மரபுகளின் மூத்த மையங்களில் ஒன்றா? | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    கீரிமலை யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று. இலங்கைத் தீவில் காணப்படும் புராதனமான பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இங்குதான் காணப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரதான பிதிரர்களுக்கான கடமைகளை ஆற்றும் நீர்பெருக்கும் இங்குதான் உள்ளது. கீரிமலை பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளின் புராணிக அடிப்படைகளை வரலாற்று அறிவியற் கண்டுக்கொண்டு திறக்க முற்படுகையில் நீண்ட நெடிய சைவ மரபுகளின் ஆதிவேர்களை கண்டுக்கொள்ள முடிகிறது.



    10 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.