எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முதல் மருத்துவர் : ஓர் அமெரிக்கர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்

    உலகக் கிறிஸ்தவ மிசன்களது வரலாற்றில் முதல் மருத்துவக் கலாநிதியாக விளங்கியவர் டேவிற் லிவிங்ஸ்டன். இவர் ஆபிரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றச் செல்ல 20 வருடங்களுக்கு முன்பே மருத்துவக் கலாநிதி ஜோன் ஸ்கடர் மற்றும் அவரது மனைவி திருமதி ஹரியற் வோட்டர்பரி ஸ்கடர் இருவரும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது மிசன் பணியை ஆரம்பித்தனர். 

    உலகில் முதன்முதல் மேலைத்தேச மிசனரி மருத்துவமனையைப் பண்டத்தரிப்பிலே ஆரம்பித்து மருத்துவராகப் பணியாற்றிய ஜோன் ஸ்கடர் (1793.09.03 – 1855.01.13) இலங்கையின் வடபகுதியில் (யாழ்ப்பாணத்தில்) கடமையாற்றிய முதலாவது தகுதிவாய்ந்த மருத்துவர் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் என்ற கௌரவத்துக்கும் உரியவர். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் பரவிய வாந்திபேதி மற்றும் மஞ்சட்காமாலை நோயைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர் ஸ்கடர் வெற்றிபெற்றார். 

    அவர் சத்திர சிகிச்சை மேற்கொள்வதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். சத்திரசிகிச்சையின் போது வழங்குகின்ற மயக்கமருந்துகள், குருதி மாற்றீடு, நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் எவையுமே அக்காலத்தில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

     #ezhuna #jaffna #history #hospital #doctor #SriLanka #யாழ்ப்பாணம் #மருத்துவ_வரலாறு

    9 min
  • தேயும் ஈழத் தமிழ்மொழி | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது.

    இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேசுதல் அல்லது ஆங்கிலத்தை தமிழ்த்தனமாகப் தமிழோடு கலந்து பேசுதல் என்ற நிலைவரம் ஈழத்தமிழ் மொழிப்பயல்வுள் ஒப்பீட்டளவிற் குறைவுதான்.

    எந்த ஒரு மொழியும் கலப்பற்றது – பேச்சு வழக்காற்று மாற்றங்களும் – கிளைகளும் அற்றவை எனப் பேசுவது மொழியின் வரலாற்றை மறுப்பதும், அதனியல்பைப் புரிந்து கொள்ளாததன் விளைவாகவும் மட்டுமே அமையும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தொல்காப்பியம் ‘திசைமொழிகள்’ பற்றிப் பேசுகிறது. போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த மொழிச் சொற்கள் பலவற்றை தமிழ் என்று நினைத்தே பல நூற்றாண்டு காலமாகக் கையாண்டுவருகிறோம்.

    10 min
  • சாதிகளின் குடியிருப்புக்களின் நியமத் திட்டம் – பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

    இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

    7 min
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் -பகுதி 2 | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | முத்துவடிவு சின்னத்தம்

    இலங்கையில் இந்திய சமூகமானது இன்று சுமார் பத்து இலட்சம் பேர்களைக் கொண்டதாக உள்ளது. 1946ல் மொத்த சனத்தொகையில் 11.7வீதமாகவிருந்த இவர்களின் பங்கு, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் பலர் தாயகம் திரும்பியதால், 1981ம் ஆண்டு 5 வீதமாகக் குறைந்தது. மேலும், இலங்கைக் குடியுரிமை பெற்ற பலர் தம்மை இலங்கைத் தமிழரென குடித்தொகைக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்வதாலேயே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் மேற்படி வீழ்ச்சி காணப்படுகின்றது.

    பர்மிய இந்தியரைப் பற்றி எழுதிய சக்ரவர்த்தி, தனது நூலில், பர்மாவில் வாழ்ந்து, கஷ்டப்பட்டு உழைத்து அந்நாட்டினது அபிவிருத்திக்குப் பெரும் பங்கினையளித்த ஒரு சமூகம், இறுதியாகத் தனது வீடுகளையும் தொழில்களையும் விட்டுத்துரத்தியடிக்கப்பட்ட ஒரு சோகமான கதையென அவர்களது வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    மலேசியா, இலங்கை, பர்மா ஆகிய மூன்று நாடுகளிலேயே இந்தியருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பர்மிய தேசிய வாதம் எழுந்த போது 1938ல் சுமார் 400000 இந்தியர்கள் பர்மாவினின்றும் வெளியேற்றப்பட்டனர். இதே விதமான இந்தியரின் வெளியேற்றம் 1948ல் பர்மா பிரித்தானிய குடியேற்ற ஆட்சியினின்று விடுதலைப் பெற்ற வேளையிலும் 1960ம் ஆண்டுகளில் நெவினினது (Nevin) தேசிய கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பொழுதும் இடம்பெற்றன. இலங்கையில் (இந்தியத்) தமிழருக்கெதிரான கலவரங்கள் நாட்டின் சுதேச தமிழர்களின் போராட்டங்களுடன் தொடர்புள்ளனவாகும். 

    #ezhuna #upcountry #malaysia #malayalam #மலையகம் #SriLanka #இந்தியா #மலேசியா

    50 min
  • பகுதி 1 – பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | முத்துவடிவு சின்னத்தம்

    1834 ஆம் ஆண்டு பிரித்தானிய சாம்ராச்சியத்தில் அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்டது.

    அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஊழியத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு மேற்கிந்திய பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் வறிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெள்ளையர்களை வேலைக்காரர்களாகக் கொண்டு செல்லுதல், கடன் ஒப்பந்த முறையில் ஆபிரிக்கரையும் சீனரையும் தொழிலாளர்களாக வரவழைத்தல் போன்ற பல்வேறு மாற்று வழிகளை நாடினர்.

    கடன் ஒப்பந்த முறையின்கீழ் கொண்டு செல்லப்பட்ட மலிவான இந்திய ஊழியத்தைப் பெருந்தோட்ட விவசாயத்தில் கையாளுவது மொறிசியஸ் தீவில் வெற்றியடைந்தமையினால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு தொலைதூர நாடுகளுக்கு தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

    1810 ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக தனியார் முகவர்கள் ஒழுங்குப்படுத்திய முறையில் இலங்கைக்கு இந்தியத் தொழிலாளரைக் கொண்டு வந்தனர்.

    #ezhuna #upcountry #malaysia #malayalam #மலையகம் #இந்தியா #மலேசியா

    25 min
  • சாதிகளுக்கிடையிலான இடையூடாட்டத்தின் இருவேறு மாதிரிகள் – பகுதி 2 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

    இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

    17 min
  • சடங்கும் குணமாக்கலும் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன்

    குணமாக்கல் செயற்பாடானது உளப்பாதிப்புற்ற மனிதனை மீண்டும் முழுமையாக பழைய நிலைக்குத் திருப்பி எடுத்தல் அல்லது அவரை சமூகத்திற்கு இயைபாக மாற்றுதல் போன்ற வேலைகளினைச் செய்வதாகும். 

     சடங்குகளின் செயற்பாட்டு விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தினை ஆய்வு செய்த விக்டர் டெர்னர் இவ்வாறான சடங்கு செயற்பாட்டினை மீவியல் என்னும் சொல்லின் மூலம் விளக்குகின்றார்.

    தமிழ் சமுதாயச் சூழலிலே இந்து சமய நடைமுறைகளுடன் சேர்த்து கிறிஸ்தவம், முஸ்லிம் சமூகக் குழுக்களிடமும் இவ்வகையான வழிபாட்டுச் சடங்காசாரங்களினைப் பரவலாகக் காண முடியும்.

    #Veddas_anthropology #healing #SriLanka #Veddas  #Batticaloa #வேடர்_மானிடவியல்

    42 min
  • யாழ்ப்பாணத்தில் சாதி குடியிருப்புக்களின் இட ஒழுங்கமைவும் நியமத் திட்டமும் – பகுதி 1 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

    இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

    29 min
  • ஈழத்துப் பறை: மீட்டெடுத்தலும் கொண்டாடலும் வேண்டி…! | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    2017இல் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற கலையார்வலர் குழுவொன்று தென்னிந்திய ‘பறை’ வாத்தியத்தை யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தீவின் வேறு சில பிராந்தியங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு பயிற்றுவித்தது. இதற்காக தமிழகத்திலிருந்து ‘பறை’ வாசிக்கும் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மேற்படி ‘பறை’ வாத்தியக் கருவி இலங்கையில் வாசிக்கப்படும் பறை மேள வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. இந்தக் கருவி இலங்கையில் மலையக மக்களிடம் பாவனையில் உள்ளது. அங்கு அது ‘தப்பு வாத்தியம்’ என்கின்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. அதனை ஒட்டிய நடனம்’ தப்பாட்டம்’ என அழைக்கப்படுகிறது. அதேவேளை மேற்படி வாத்தியத்தை தமிழகத்திலும் ‘தப்பு’ என்ற பெயரில் அழைக்கும் வழக்கு இன்றும் உண்டு என தமிழகத்தைச் சேர்ந்த புலமையாளர் ஒருவர் இது குறித்த உரையாடல் ஒன்றில் என்னிடம் தெரிவித்தார். அதேநேரம் அதனை பறை எனவும் அழைப்பதுண்டெனவும், அண்மைக்காலத்தில் அதனைப் பறையென அழைக்கும் மரபு அதிகரித்து உள்ளது எனவும் இன்னொரு தமிழக நண்பர் கூறினார். இந்தப் பெயரிடல் விவகாரத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, ஈழப் பின்னணியில் ‘தமிழகப் பறையை’ (அல்லது தப்பு வாத்தியம் எனவும் அழைக்கப்படுவதை) எந்த விழிப்புமற்று ஈழத்தில் உள்வாங்குகையில் ஏற்படும் பண்பாட்டு நெருக்கடி பற்றியதே இக்கட்டுரை.

    14 min
  • உலகின் முதல் மிஷனரி வைத்தியசாலை | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்

    நியூயோர்க்கில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த ஜோன் ஸ்கடர் என்னும் அமெரிக்கரே மேலைத்தேய(அலோபதி) மருத்துவத்தைப் பரப்புவதற்க்காக ஆசியாவுக்கு அனுப்பப்பட்ட உலகின் முதலாவது மிசனரி மருத்துவர்.

    மருத்துவர் கிறீன் 1864 இல் தமிழ்மொழி மூலம் மருத்துவக் கற்கை நெறியை ஆரம்பித்தார். இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் முதன்முதலில் தமிழிலேயே மேலைத்தேச (அலோபதி) மருத்துவம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயிற் கற்பிக்கப்பட்டது.

    யாழ்ப்பாணத்தில் 26 வருடங்கள் மருத்துவராக சேவை செய்த கிறீன் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆற்றிய தொண்டு அவரது 200 ஆவது பிறந்த ஆண்டில் நினைவு கூரப்படல் வேண்டும்.

    #ezhuna #jaffna #history #hospital #SriLanka #யாழ்ப்பாணம் #மருத்துவ_வரலாறு #தமிழ்மொழி

    7 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.