
Sign up to save your podcasts
Or


இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
பண்பாட்டுச் சுற்றுலா (cultural tourism) என்பது குறித்த ஒரு பிராந்தியத்தின் பண்பாட்டுச் சொத்துக்கள் மீது கவனத்தைக் குவித்துள்ள சுற்றுலா ஆகும். அது குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் பௌதீகச் சொத்துக்கள், வழக்காறுகள், பயில்வுகள், நம்பிக்கைகள் என்பனவற்றின் மீது கவனத்தைக் கோருகின்ற பண்பாட்டு மேம்பாட்டு முறையாகும். அது பல்வேறுபட்ட உப களங்களைக் கொண்ட ஒரு பரந்த பரப்பாகும். இன்று இலங்கைச் சுற்றுலாத்துறையின் புதிய அல்லது மீள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பரப்பாக வட இலங்கைச் சுற்றுலாவும் அமைந்துள்ளது. பரந்த பின்னணியிற் நோக்கினால் இது ‘வடக்கின் வசந்தம்’ என்று முன்பு பெயரிடப்பட்ட எண்ணக்கருவின் நீட்சியுமாகும்.
இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைக் கேட்டால் எம்மிற் பலர் வெகுண்டு எழுந்துவிடுகிறோம். அதனை ஒரு ஜனநாயக விரோத அறைகூவலாகவும் பன்மைத் தன்மைகள் பண்பாட்டு வேறுபாடுகளை மறுதலிக்கும், அதேநேரம் அதனை ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் மேலாதிக்கச் செயற்பாடாகவும் கருதி பெருங்குரல் எடுத்து அதனை எதிர்க்கும் குரல்களை பதிவிடுகிறோம். “அந்நியன் கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும், பாடுவோம் உயர்த்திய குரல்களில்” என்று எண்பதுகளில் தமிழ்ப் பகுதிகளில் ஒலித்தடங்கிய இளைஞர் குரல்கள் இக்கட்டுரையை எழுதும் நள்ளிரவில் எனக்குத் துயரத்தைத் தருகிறது. உண்மையில் இவ்விரண்டு பற்றியும் பேசக் கூடத் தகுதியல்லாத ஒரு நிகழ்கால நாடகத்தில் நாங்களும் எங்கள் அரசியற் தலைவர்கள் எனும் பெருங் கூட்டமும் பாத்திரங்களாய் உள்ளோம்.
வன்னிப் பெருநிலம் என்பது இலங்கைத் தீவின் வடபுலத்தில் இயற்கை மரபுரிமைகளைச் செறிவாகக் கொண்டதொரு பிராந்தியமாகும். நீர் – நிலஞ்சார்ந்த மிகப் பரந்த இயற்கை அமைவுகளையும் அதுசார்ந்த பிற உயிரியற் சூழலையும் பண்பாட்டு நிலவுருக்களையும் உடைய வன்னி, இலங்கையின் இனத்துவ அரசியலின் ஆயுத மோதல் முடித்து வைக்கப்பட்ட பின்னருங்கூட மிகப் பெரிய அரசியற் சூதாட்ட களமாகக் காணப்படுகிறது. அந்தக் களத்தைக் கருத்து ரீதியாகவும் – பௌதிக ரீதியாகவும் கைப்பற்றுவதற்காக அண்மைக் காலத்தில் களமிறக்கி விடப்பட்டுள்ள புதிய படையணி தொல்லியலாய்வாகும். அது அறிவியல் ஆடைக்குள் தன்னை உருமறைப்புச் செய்துக்கொண்டு வனவளத் திணைக்களம், வன சீவராசிகள் திணைக்களம் முதலான உப படையணிக் கட்டமைப்புக்கள் சகிதம் முன்னரங்கிற் தொழிற்படுகின்றது. இது வெறுமனே தமிழர் வாழும் பகுதிகளைக் கைப்பற்றல், அவற்றுக்கு இடையிலான நிலத் தொடர்ச்சிகளை அறுத்தல் அதன்மூலமாக அவர்களால் முன்மொழியப்படும் பாரம்பரிய வாழிடக் கோரிக்கையைப் பௌதிக ரீதியாகச் சிதைத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
தற்காலத்தில் உலகளாவிய ரீதியிலே பாரம்பரிய அறிவைப் பொறுத்தவரையில் சந்திகளுக்கிடையே சமத்துவமற்றதோர் நிலைமையே காணப்படுகிறது. அதற்கு இலங்கையும், வன்னிப்பிராந்தியமும் கூட விதிவிலக்காகி விடவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதோர் நிலைமையாகும்.
புதிய அபிவிருத்தி உருவாக உருவாக, மரங்கள் வழங்கும் சேவைகளை நவீன கண்டுபிடிப்புகள் பிரதியீடு செய்யத் தொடங்கும். இதனால் மரங்களிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் பயன்கள் குறைந்துகொண்டே செல்லும். இது தொடர்ந்து நடைபெற, மெது மெதுவாக அந்த அனுபவ அறிவு அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படாமலே போகும்.
எம்மில் எவருக்கு அத்தி மரத்தை அடையாளம் காணத்தெரியும்? கல்லத்தி, காட்டத்தி, குருகத்தி, கொடியத்தி, சிற்றத்தி, சீமையத்தி அல்லது தேனத்தி, செவ்வத்தி, அத்தி, நீரத்தி, பேயத்தி, பேரத்தி, மரந்தின்னியத்தி, மலையத்தி, விழலத்தி போன்ற அத்தியின் வகைகள் பற்றித் தெரியும்?
#ezhuna #northern #Cluster_Fig_Tree #SriLanka #வடக்கின்_விருட்சங்கள்
விபூதி, சந்தனம் , குங்குமம் என்பவற்றை மலிவான பொருட்கள் மூலம் உருவாக்குதனூடாக உள்ளூர் மரபுகள் அழிக்கப்படுவதோடு, சமயப் பயில்வுகளும் கேலிப் பொருளாக்கப்படுகின்றன. இந்தக் கேலியாக்குதலின் இன்றைய உச்சபட்ச நடவடிக்கைளில் ஒன்றை இதனோடு சேர்த்துக் கூறுதல் பொருத்தமானது என நினைக்கிறேன். இப்போதெல்லாம் கோவிலுக்காக எதனையாவது வாங்கப் போனால் ‘கோயிலுக்குத் தானே’ என்று கேட்டுவிட்டு தரங் குறைந்தவற்றைக் கோவிலுக்கானதாக முன்வைக்கின்றனர். உதாரணமாக, நெய்யை எடுத்துக் கொண்டால் – ‘சாப்பாட்டிற்கா? அல்லது பூசைக்கா?’ எனக் கேட்டுவிட்டுத் தரங் குறைந்தவற்றைக் கோயிலுக்கானதாகத் தருகின்றனர். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை முதல் விளைச்சல், உள்ளதிலேயே ஆகச் சிறந்தவற்றையே கோவில்களுக்குத் தருதல் என்ற நடைமுறையே இருந்தது. இந்த மனமாற்றங்களின் தொடர்ச்சியே கோவிற் பிரசாதங்களை வெறுமனே அசண்டையீனமாக கொள்ளுதலின் அடிப்படை போலத் தோன்றுகிறது.
இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
இந்தத் தமிழ் பௌத்த கடந்த காலத்தை உரிமை கோரல் என்பது தமிழ் மரபுரிமைக் களத்தை மேலும் செழுமைப்படுத்துவதுடன், இலங்கைத் தீவில் பௌத்தத்தின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் ‘சிங்கள பௌத்த தேசம்’ என்ற பெருங்கதையாடலைக் குழப்பும் செயற்பாடாகவும் அமையும்.
From the publisher's feed