ஏண்டா தங்கம் ஏதுடா உனக்கு துட்டு? " அங்கிட்டு பார்த்துகிட்டே சொன்னான் அழகு சிங்கம்- "நல்லத்தா குடுத்துச்சு" "நல்லத்தானா...?". "அதான்.... திம்சு ". புழுதியில கிடந்த ஒரு முள்ளு சுருக்குன்னு கால்ல குத்த, அவன் சொன்ன சொல்லு நறுக்குனு நெஞ்சுல குத்த, ரெண்டு வலியில எந்த வலி பெருங்கொண்ட வலின்னு தெரியாம நிண்ட இடத்தில நின்டு போனா கருவாச்சி, ஒத்த காலம் மட்டும் ஒசக்க தூக்கி.