உலகிலேயே சிறப்பு மிக்க, இந்திய அரசமைப்புச் சட்டம் 26 நவம்பர் 1949ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது இரண்டு மாதங்கள் கழித்து வேறொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் தான் நடைமுறைக்கு வந்தது. முதன் முதலில் டிசம்பர் 1929 லாகூர் காங்கிரசு மாநாட்டில் கொடியேற்றி பூர்ண சுவராஜ்யம் பிரகடனம் செய்து, 26 சனவரி 1930 முதல் சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது. அதன் நினைவாகவே 26 சனவரி தேர்ந்தெடுக்கப்பட்டது – அதுவே இந்தியாவின் குடியரசு நாள் !