'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அனிருத் பேசுகையில், "என்னுடைய இசையில் முதலில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது எதிர் நீச்சல் திரைப்படம் தான். நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் எஸ்.கே. தான். இது நாங்க சேரும் 8வது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன்னைக்கு இங்க இருக்குறதுக்கு காரணம். ” என மிகவும் எமோஷனலாக கூறினார்.