Share நல்லூர் வானொலி Radio Nallur
Share to email
Share to Facebook
Share to X
வன்னித் தெருவெளி அரங்கு ஏனிந்த ஓரவஞ்சனை
'இலங்கையின் சமகால தமிழ் அரசியல் அரங்கு' என்ற நூல் பற்றிய பாலா மாஸடர் அவர்களின் விமர்சனப்பார்வை
பேராசிரியர் நந்தி எழுதிய பல்லுக்கொழுக்கட்டை சிறுகதை மல்லிகை சஞ்சிகையில் 1992 ஆண்டு வெளிவந்தது. கதை வாசித்திருப்பவர் கிருத்திகா
நந்தியின் கொடுமைக்கு அப்பால்...
மல்லிகை 1995 வெளிவந்த சிறுகதை இதனை வாசித்திருப்பவர் பாலா பாலேஸ் அவர்கள்
சிங்களத்து மருத்துவிச்சி பேராசிரியர் நந்தி எழுதிய சிறுகதை குமதம் சஞ்சிகையில் 1989 ஆண்டு வெளிவந்தது . நந்தியின் சிறுகதைகள் என்ற தொகுப்பில் இந்தக்கதை இடம்பெற்றுள்ளது. கதை வாசித்தவர் துவாரதி
கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகையில் ஆழத்து முத்து பகுதியில் வெளிவந்த 'அரங்கச்செயற்பாட்டாளர் தேவநாயகம் தேவானந்த்' என்ற கட்டுரையின் ஒலி வடிவம்.
குரல் : சனா
This documentary is about famous Srilankan Tamil Dramatist & Journalist Thevanayagam Thevananth, published in Thaiveedu Tamil Magazine in January 2021 from CANADA. Voice: SANA
ஏகாந்தம்: முழு வேடமுக நாடகம்
Ekanthan : Full Mask Play in Tamil Language
செயல் திறன் அரங்க இயக்கத்தினால் தயாரிக்கப்பட்டு 2015 ஆண்டு நல்லூர் நாடகத் திருவிழாவில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. 2021 ஆண்டு இணையவழியான நாடக ஆற்றுகையில் ஜனவரி 30 திகதி அரங்கேறியது. ஈழத்து நாடக வரலாற்றில் இணையவழியாக அரங்கேறிய இரண்டாவது நாடகம் என்ற பெருமை இந்த நாடகத்திற்கு உண்டு. இலங்கையில் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனித்திருக்குத் முதியவர்கள் பற்றி இந்த நாடகம் பேசுகிறது. ஈழ நாடகவரலாற்றில் முழு வேடமுகங்களைப் பயன்படுத்தி மேடையேற்றப்பட்ட முதலாவது நாடகம் ஏகாந்தம்.
Ekantham is the first play with the full mask in Srilankan Tamil Theatre's history. The play was first produced and staged by Active Theatre Movement, Srilanka in 2015. It was performed in online theatre Space via ZOOM 30.01.2021.The play was written and directed by Thevanayagam Thevananth, one of the famous play write, director, and theatre academic in Srilanka
பசுவும் புலியும் சிறுவர்களுக்கான நாடகம் செயல் தின் அரங்க இயக்கத்தினால் 2015ஆண்டு தயாரித்து மேடையேற்றப்பட்டது. இது பொம்மைகள் அரங்காகவும் மேடையேற்றச் சிறந்தத நாடகமாகும்
This Children Play was produced and performed by Active Theatre Movement, Srilanka in 2015. This can be used for puppetry theatre also
பாலர் பாடல்கள் அசைந்தாடும் யானை சிறுவர் நாடகத்துக்கான பாடல்கள் இசையமைப்பு த.றொபேட்
சிறுவர் பார்வையாளர்களுக்காகத் தயாரிக்கப்படுகின்ற நாடகங்களை சிறுவர் அரங்கு என்று குறிப்பிடலாம். பெரியவர்கள் சிறுவர்களுக்காக நடிக்கின்ற நாடகங்கள், சிறுவர்கள் சிறுவர்களுக்காக நடிக்கின்ற நாடகங்கள் மற்றும் சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்து சிறுவர்களுக்காக நடிக்கின்ற நாடகங்கள் என்று பல வகை சிறுவர் நாடகங்கள் உண்டு. பாட்டி சிறுவர்களுக்காக பொம்மைகள் நடிக்கும் நாடகம். தயாரிப்பு செயல் திறன் அரங்க இயக்கம். எழுத்துரு நெறியாள்கை தேவநாயகம் தேவானந்த்
'கொண்டைச் சேவல்' சிறுவர் நாடகம்
----------------------------------------------------------
கதை சொல்லப்போறோம் நாங்கள் கதை சொல்லப்போறோம்
தம்பிமாருக்கும் தங்கச்சிமாருக்கும் கதை சொல்லப்போறோம்
கதை சொல்லப்போறோம் நாங்கள் கதை சொல்லப்போறோம்
அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும் கதை சொல்லப்போறோம்
கையைத் தட்டிப் பாடுங்கோ கலை ஆட்டி துள்ளுங்கோ
சின்னவரும் பெரியவரும் சேர்ந்து ஒன்றாய் ஆடுங்கோ
எழுச்சியான கதையிது மகிழ்ச்சியான கதையிது
எல்லா மனதும் கொள்ளைகொள்ளும் இனிமையான கதையிது
The podcast currently has 15 episodes available.