நின்றுகொண்டிருந்த ரயிலில் சமையல் சிலிண்டர் வெடித்து திடீரென தீப்பற்றியது. இதனை கேள்விப்பட்ட அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை & டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சசென்னையிலிருந்து விரைந்து வந்தார். விமானத்தில் தன்னோடு பயணித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்என்.சிங் அவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு ரயில்வே மருத்துவமனை விரைந்தார்.