மந்தநிலை பற்றாக்குறை ஆள்வோருக் குண்டோ!
உலக வகை யுற்பத்தி குறியீடு
காலக் கணிப்பு முறையில் இருப்புநிலை
ஏல ஒலியில் ஏறும் விலை
உலவும் பற்றாக்குறை ஏழ்மை நிலைக்கே.
இலாபம் முதலீட்டு தொகுப்போர் வைப்பகம்
காலகாலமாக உள்ளம் உறவாடும் கொள்முதல்
ஆலாபனை அசைவு இசைவோருக்கு வாய்ப்பு
விலா யெலும்பு நெறுக்கி உழைப்போருக்குண்டோ!
வீக்கம் கொண்டார் நிதிநிலை அறிக்கை
ஊக்கம் கொண்டார் கொள்வார் மேலும்
தாக்கம் அதிகம் உள்ளோருக்கே வலிக்கும்
நோக்கம் நோக்கிய நோக்கில் ஆள்வோருக்கே.
மந்தநிலையில் செல்வம் செல்லும் நாடு
அந்தநிலை நேர வணிக விற்பனை
உந்த உத்தரவு தாழ்நிலை யோர்க்கே!
இந்த நிலையே காலத் தொடராம்.