Seyalmantram

Seyalmantram

By Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with AcademyEducationLanguage Learning
Download on the App Store

Seyalmantram episodes

  • ஆராய்ந்து பார் ஓராயிரமும் இனியவை
    #ஆராய்ந்து_பார்! #ஓராயிரமும்_இனியவை !!
    ஓராயிரம் ஆண்டும் கடந்து போகும்
    ஏராளம் கொண்டதில்
    இனிதே காண்
    தாராளமாக நாளும் காட்டிடும் அகம்
    தோராய குறியீடு வரலாறு வரையறை.
    வரையறை கொண்டவை படிப்பினை தொடர்
    நிரையசை குறில் நெடில் உயிரொலி
    தரையில் வாழும் உயிரினச் சேர்க்கை
    விரைவாற்றல் பெற்ற மக்களின் பயணம்.
    பயண வரலாறு படிவ படிமலர்ச்சி
    ஆய கலைகளின் இலக்கியச் சுடர்
    நயம்பட பதிவினில் மொழியியல் இருப்பு
    இயற்பியல் வேதியியல் காட்சி கண்ணுக்கு.
    கண்ணுக்கு இனியவை கூறலில் உள்ளவை
    பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் வல்லமை
    மண்ணுக்கு மண்ணுயிர் வழங்கும் ஆற்றல்
    விண்ணுக்குள் வியப்பூட்டும் விந்தை ஓராயிரம்.
    2 min
  • ஆன்றோர் செயல் சான்றில் தொடரும்.
    ஆன்றோர் செயல்
    சான்றில் தொடரும்.
    இடம் பலவாறு இருந்த போதும்
    மடத்தில் படுத்து உறங்கும் வேளையிலும்
    திடமாக உறுதி கொடுக்கும் ஆற்றல்
    படம் பிடித்து முடிவெடுக்கும் கணம்.
    கணம் கூடி காக்கும் திறன்
    குணம் மூலத் தன்மையுறும் பன்மை
    மணம் கூடுகையில் உள்ள மதிப்பு
    பணத் தொகை
    (தொண்டுடன் கைமாறும்) நிகழ்வு என்றும் .
    என்றும் நட்புடன் பழகும் பண்பு
    ஊன்றும் பலகலைகள் மாண்பு மிகும்
    இன்றும் பலருக்கு தொடரும் நல்கை(கொடை)
    நன்றும் தீதும் பதியும் ஆன்றோர்.
    ஆன்றோர் செயல் சான்றில் தொடரும்
    சான்றோர் பேச்சு வகை உண்டு
    நின்று பலகால பணியில் தொடர்புறும்
    தோன்றி மலரும் படிமலர்ச்சி வரலாறு.
    2 min
  • வரவும் செலவும் துருப்பும் இருப்பு
    வரவும் செலவும்
    துருப்பும் இருப்பு .
    துருப்பு உடையவை குறிப்பில் நிலைக்கும்
    பருப்பு புதுப்புது ரக தசை(புரத)ச்சத்து
    கருப்பு கண்மணி குவிஆடி ஒளிக்கதிர்
    இருப்பு ஒதுக்கீடும் அடுத்தடுத்த பொறுப்பு.
    பொறுப்பு தரும் தேவையும் உருவப்படும்
    உறுப்பும் நாடும் நிலைப்பாடும் குறியீடு
    வேற்றுமை தரத்திலும் ஒற்றுமை நிலைக்கட்டும்
    ஊறும் பொருள் தரும் ஆற்றல்.
    ஆற்றல் பெறும் உள்ளவகை கோட்பாடு
    தேற்றம் பெரும் பகுதி நேரம்
    மற்றும் காலப் பகுதி கட்டமைப்பு
    பற்றும் வலைப்பின்னல் பகிரும் தரவு.
    தரவும் தீர்வும் தேர்வு பெறும்
    நிரவும் நகர்வும் பூரண சேர்க்கை
    பரவும் தன்மை கொண்டவை இருப்பு
    வரவும் செலவும் நிலைப்பில் சேவை.
    2 min
  • ஆத்திசூடி உலகத் தாய்மொழி நாள் 2024 பதிவு.
    உலகத் தாய்மொழி நாள் 21 02 2024 -
    ஆத்திசூடி பாத்திட்ட
    கரந்துறை பாவினம்
    அன்பெனும் அகல்விளக்கு அனைவரின் அகத்தொடர் .
    ஆக்கமும் ஆய்வும் ஆழ்ந்த ஆர்வமும்
    இன்ப இணைவில் இதமாய் இணையதளம்.
    ஈகை ஈர்ப்பில் ஈன்று ஈட்டும்
    உணவில் உகந்தவை உண்டு உயிர்ப்புறும்
    ஊக்கம் ஊகிப்பது ஊசலாடி ஊடகமாகும்
    எங்கும் எக்கணமும் எச்சரிப்பும் எடுத்துக்காட்டும்.
    ஏற்றுமும் ஏற்படும் ஏட்டிலே ஏறும்.
    ஐந்தும் ஐம்புலத்திலும் ஐ'யா'வுடன் ஐக்கியமாகும்.(யாவும்)
    ஒன்றும் ஒன்றின்மையும் ஒன்றிடும் ஒட்டும்.
    ஓங்கிய ஓசை ஓரளவு
    ஓசைவாயில்.
    ஔவை ஔகம்(இடைப்பாட்டு) ஔதசிய(பால்)
    ஔபத்தியம்(புணர்ச்சி).
    அஃதை இஃதை அஃறிணையும்பற்றிடு
    அஃதாக்கத்தில்.
    3 min
  • தனம் தரும்புவி புதுப்புது விசை
    தனம் தரும்'புவி' புதுப்புது விசை.
    (விசை- விண்ணின் சைகை)
    ஆண்டு பல செல்லும் புவி
    பண்டு(பண்டைய )
    கால கட்ட உயிரிழையில்
    உண்டு உயிர்த்து வாழும் உயிர்க்கு
    தொண்டு தொடரும் தொடர்பில் ஒன்பது.
    ஒன்பது பத்து பக்கத்து இலக்கு
    என்பது எதிலும் பலரின் முயற்சி
    தின்பது ஒவ்வொரு நாளும் வளர்சிதை
    மன்பது(மக்களினம்) மனித உயிரின‌ குணம்
    குணம் குன்று போல் விளங்கும்
    மணம் வீசும் நறுமணம் கமழும்
    அணம் மேல்வாய் தாடை உறுப்பு
    கணம் தோறும் நிலைக்குழுவின இனம்.
    இனம் இன்ப துன்ப மீள்சுழற்சி
    வனம் காடு மலை நீரேற்றம்
    தினம் காக்கும் காலக் குறியீடு
    தனம் தரும்புவி புதுப்புது விசை.
    2 min
  • தொடர்மூளைப்பதிவு இடர்நீக்கும் செயலாக்கம்
    தொடர்மூளைப்பதிவு
    இடர்நீக்கும் செயலாக்கம்.
    அலையலையாய் பரவும் காற்றின் திசை
    இலையிலையாய் நிலவும் பச்சை பயிர்த்தொழில்
    உலைவடிவ தொழில் நுட்ப உதவி
    கலை வடிவாய் அரும்பும் அகராதி
    அகம் புறம் சேர்க்கும் ஒலிப்பு
    தகவல் தொழில்நுட்ப மூலச்சேர்க்கை தேவை
    பகல் இரவு நேரத் தொடர்பும்
    சகலகலா வல்லமை கொள்ளும் ஆற்றல்.
    ஆற்றல் அறிவுத்திறன் ஆராய்ச்சித் துறை
    மாற்றம் படைக்கும் விண்வெளி பார்வை
    ஏற்றம் பெறும் வரை சுழலும்
    உற்ற பொருள் மாறுபடும் வலைப்பதிவு
    வலைப்பதிவு முகப்பு உள்ள பயணப்படுகை
    நிலைப்பதிவில் உலவி வரும் நிலைப்பொழுதும்
    ஓலைப்பதிவில் தொடங்கிய காலவரையறை எழுத்துரு
    தலைப்பதிவில் மூளைத் தொடர்பே மொழி.
    3 min
  • சமநலநிதி - MUTUAL FUND
    சமநல நிதி:
    (MF-MUTUAL FUND):
    சட்டமுறை மதிப்பீட்டின் நடப்பு (இ)லட்சிய நிகழ்வு திறனை சமநல நிதி(க) என்போம்.
    சமநல நிதி
    ஊடுறவு நிதி
    நிலையுதவி நிதியும் எனலாம்.
    சமநல நிதி(MF) சமுதாய மகரந்தக்கூடு
    சமநிலை நிதி நிறுமத் திறன்
    சம அளவாற்றல் உயர் திசை
    சம காலத்தில் காக்கும் மதிப்பு.
    மதிப்பு மனித திறவுகோல் குறியீடு
    மதி(க) மதிக்கும் திசுவின் நரம்பிழை.
    மதிநுட்பத் துறையில் கணக்கீட்டு முறை
    மதிப்புறு சேவை(க) சேர்க்கும் வைப்புநிதி.
    வைப்புநிதி தொகுப்பு நிதி நுழைவு
    வைப்பு நடப்பின்
    வேரின் விழுதுகள்
    வைத்திருக்கும் வரை
    இயல்புநிலை மூலதனம்(AuM)
    வைப்பதன் சிறு நிதி சேர்ப்பு.
    சேர்ப்பதன் வணிக இருப்புநிதி அளவீடு
    சேர்ப்பதும் புதிய சொத்து மதிப்பீடு (NAV)
    சேரும் கூட்டுத்திரள் அடுக்கு கணக்கீடு
    சேர்க்கும் மாற்றும் விகித வளர்ச்சி(XIRR).
    குறிப்பு:
    க(க-கரந்துறை) பாவினம்.
    2 min

About Seyalmantram

From the publisher's feed

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.