* கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா தக்கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் புஜபலி கர்ஜகி (வயது 34). இவரும், கிராமத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் 2 பேரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் பாக்யஸ்ரீயின் தந்தை தம்மனகவுடா பட்டீல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்யஸ்ரீ, புஜபலியை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு புஜபலியும், அவரது உறவினரான சுமேத் என்பவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது காரில் வந்த தம்மனகவுடா மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் புஜபலியையும், சுமேத்தையும் 4 பேரும் தாக்கினர். அப்போது சுமேத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். புஜபலியை சூழ்ந்து கொண்ட 4 பேரும் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கத்தியால் புஜபலியை 4 பேரும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த புஜபலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
* லஞ்ச ஒழிப்பு துறையில் வழங்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிமுக காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் உண்டியல் பணத்தில் கமிஷன், விபூதி, பஞ்சாமிர்த டெண்டரில் 200 கோடி ஊழல் செய்ததாக அவரது கிராம மக்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தனர்.
* நம்ம ஸ்கூல்' திட்டத்திற்கு தனது சொந்த பணத்தில் இருந்து, ரூ. 5 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
* பரந்தூர்: விமான நிலைய எதிர்ப்பு பேரணி தற்காலிகமாக நிறுத்தம்! - அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை
* "தேசிய பதவிக்கான கனவு; கண்மூடிக் கொண்டு கேரள அரசின் அத்துமீறலை அனுமதிக்கிறார் ஸ்டாலின்!" - அண்ணாமலை
* பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன்
* அண்ணாமலை: ``இதுதான் தேசபக்தியா? கம்பி கட்டும் கதைகளைச் சொல்ல வேண்டாம்!" - செந்தில் பாலாஜி காட்டம்/ ``ஆடுகள் வளர்த்து சேர்த்து, 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?" எனச் சாடியிருந்தார்.இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "ஆகஸ்ட் 2011-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்" எனத் தெரிவித்திருந்தார்.செந்தில் பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், ``சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 -ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.
* பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு என்ன வழங்கலாம்?.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
* பிறந்தநாள் - பி.டி.ரணதிவே, க.அன்பழகன்
நினைவுநாள் - கி.ஆ.பெ.விசுவநாதம்
-Solratha sollitom